"நான் குடும்பஸ்தன், மன்னிச்சிடுங்க".. பெண் மீது சிறுநீர் சென்றுவிட்டு.. கதறி அழுத "சங்கர் மிஸ்ரா"
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்துவிட்டு, பின்னர் போதை தெளிந்ததும் போலீஸில் புகார் அளித்துவிடாதீர்கள் என அப்பெண்ணிடம் சங்கர் மிஸ்ரா கதறி அழுது மன்னிப்பு கேட்ட விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
"நான் குடும்பஸ்தன், இந்த சம்பவத்தால் என் மனைவி, மகன் பாதித்துவிடக்கூடாது" என சங்கர் மிஸ்ரா அப்பெண்ணிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்டுள்ளார்.
இதன் காரணமாகவே, ஏர் இந்தியாவுக்கு தான் அளித்த புகாரில் சங்கர் மிஸ்ராவை கைது செய்ய வேண்டும் என தான் வலியுறுத்தி இருந்ததை பெரிய மனதுடன் அப்பெண் திரும்பப் பெற்றிருக்கிறார்.

புகைப்படத்தை வெளியிட்ட போலீஸ்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து டெல்லி நோக்கி கடந்த நவம்பர் 26-ம் தேதி ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் அளவுக்கு மீறி மது அருந்திய ஒருவர், உச்சக்கட்ட போதையில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்தார். இதுதொடர்பாக அப்பெண் புகார் அளித்தும் அவர் மீது ஏர் இந்தியா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, ஏர் இந்தியா குழுமத் தலைவருக்கு அப்பெண் புகார் கடிதம் எழுதவே, இந்த விஷயம் பூதாகரமானது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர் 30 நாட்களுக்கு விமானத்தில் பறக்க ஏர் இந்தியா தடை விதித்தது. மேலும், அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்தது. இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரது அடையாளத்தையும், புகைப்படத்தையும் வெளியிட்டது.

தலைமறைவான சங்கர் மிஸ்ரா
டெல்லி போலீஸார் வெளியிட்ட அடையாளத்தின் படி அந்த நபர் மும்பையைச் சேர்ந்த சங்கர் மிஸ்ரா (44) என்பதும், அமெரிக்க நிறுவனம் ஒன்றில் இந்தியப் பிரிவு துணைத் தலைவராக அவர் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த சங்கர் மிஸ்ரா தற்போது தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவர் மும்பையை விட்டு வெளியேறிவிடக் கூடாது என்பதற்காக சங்கர் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை டெல்லி போலீஸார் பிறப்பித்துள்ளனர்.

கதறி அழுது மன்னிப்பு..
இந்நிலையில், சங்கர் மிஸ்ரா அப்பெண்ணிடம் கதறி அழுது மன்னிப்பு கேட்ட விஷயம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஏர் இந்தியா அளித்த புகாரில், பாதிக்கப்பட்ட பெண் எழுதிய கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டது. அதில், "விரும்பத்தகாத அந்த சம்பவம் நடந்த பிறகு, விமான சிப்பந்திகளிடம் புகார் அளித்தேன். மேலும், விமானம் தரையிறங்கியதும் அவர் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால், விமான சிப்பந்திகளோ உங்களிடம் அவன் மன்னிப்பு கேட்க விரும்புகிறார் என்றனர். ஆனால் நான் அவரை பார்க்க விரும்பவில்லை என்றேன். இருந்தபோதிலும், அந்த நபர் என் முன்னே வந்து, என்னை மன்னித்துவிடுங்கள். போலீஸில் புகார் அளித்து விடாதீர்கள். நான் குடும்பஸ்தன். இந்த சம்பவத்தால் எனது மனைவியும் மகனும் பாதித்துவிடக் கூடாது எனக் கூறி கதறி அழுதார்.

விரைவில் கைது
இதனால் நானும் வேறு வழியில்லாமல் அவரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வாபஸ் பெற்றேன்" என அந்தப் பெண் கடிதத்தில் கூறியுள்ளார். அதன் காரணமாகவே, ஏர் இந்தியாவும் சங்கர் மிஸ்ரா மீது போலீஸில் புகார் அளிக்கவில்லை. ஆனால், தற்போது விஷயம் பூதாகரமானதால் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவின் பேரில் அவர் மீது ஏர் இந்தியா போலீஸில் புகார் அளித்தது. இந்நிலையில், சங்கர் மிஸ்ராவின் இருப்பிடம் தெரிந்துள்ளதாகவும், அவரை போலீஸ் நெருங்கி வருவதாகவும் தகலவறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications