தமிழர்கள் எதுக்குங்க இந்தி பேசனும்! எந்த சட்டத்துல எழுதி இருக்கு..அஜய் தேவ்கனை விளாசிய சோனு நிகாம்!
டெல்லி : நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முடியாது, ஏனெனில் அந்த மொழி "தேசிய மொழி" என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்று கூறியுள்ள பாடகர் சோனு நிகம், தமிழர்கள் எதற்காக இந்தி பேச வேண்டுமென கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த வியாழன் அன்று பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கும் கன்னட நடிகர் சுதீப் சஞ்சீவ்க்கும் இடையே நடந்த சூடான கருத்துப் பரிமாற்றம், இந்தி தேசிய மொழியா? என்ற சூடான விவாதத்தை கிளப்பியது.
பல ஊடகங்களிலும் இந்த விவகாரம் பேசுபொருளான நிலையில், இந்தி நமது தேசிய மொழி அல்ல என்று சுதீப் சுட்டிக்காட்டிய நிலையில், தென்னிந்திய மொழிகளில் உள்ள திரைப்படங்கள் ஏன் இந்தியில் டப் செய்யப்படுகிறது என்று அஜய் தேவ்கன் கேள்வி எழுப்பினார்.

பலத்த சர்ச்சை
இந்த பரிமாற்றம் சமூக ஊடகங்களில் ஒரு விவாதத்தைத் கிளப்பிய நிலையில், அரசியல்வாதிகளும் இந்த விவாதத்தில் இணைந்தனர். அஜய் தேவ்கன் பாஜகவின் ஊதுகுழலாகப் பேசுகிறார் என்று கர்நாடகத்தைச் சேர்ந்த பல அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம் சாட்டினர். இந்தி விவகாரத்தில் சினிமா மட்டும் சிக்கவில்லை. கடந்த மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தியை அலுவல் மொழியாக்கலாம் என கூறிய நிலையில், பல தென்னகத் தலைவர்கள் இந்தியைத் திணிக்கும் எந்த முயற்சியும் பலனளிக்காது என்று எச்சரித்திருந்தனர்.

இந்தி திணிப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலுங்கானா அமைச்சர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட தலைவர்கள் அமித் ஷாவின் கருத்துக்கு எதிராகப் பேசியதுடன், வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம் என்று வலியுறுத்தினர். இந்நிலையில் 'அவர்கள் (தமிழர்கள்) ஏன் இந்தியில் பேச வேண்டும்?' என கேள்வி எழுப்பியுள்ள பிரபல இந்தி பாடகர் சோனு நிகம் "எங்கள் நீதிமன்றங்களில் கூட, தீர்ப்புகள் ஆங்கிலத்தில் உள்ளன," என்று கூறியுள்ளார்.

சோனு நிகாம் கருத்து
நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்றாலும், இந்தி மொழி பேசாத மக்கள் மீது திணிக்க முடியாது, ஏனெனில் அந்த மொழி "தேசிய மொழி" என்று அரசியலமைப்பில் குறிப்பிடப்படவில்லை என்ற பாடகர் சோனு நிகம், "எனது அறிவின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இந்தி தேசிய மொழியாக எழுதப்படவில்லை. இது குறித்தும் நிபுணர்களுடன் கலந்தாலோசித்தேன். நாட்டில் அதிகம் பேசப்படும் மொழி இந்தி என்பது எனக்குப் புரிகிறது. அதைச் சொன்னதும் தமிழ் என்பதை நாங்கள் அறிவோம்.

பழமையான மொழி தமிழ்
உலகின் பழமையான மொழியா? என சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் இடையே விவாதம் நடந்து வருகிறது.உலகிலேயே தமிழ்தான் மிகப் பழமையான மொழி என்று மக்கள் சொல்கிறார்கள் எனவும் அவர் கூறினார். ஏற்கனவே பல உள்நாட்டு பிரச்சனைகளை சந்தித்து வரும் நாட்டில் இந்த சர்ச்சை தேவையற்ற பதற்றத்தை உருவாக்கும் என்ற நிகாம், நாட்டில் குறைவான பிரச்சனைகள் தான் உள்ளதா, நீங்கள் தமிழர், நீங்கள் இந்தி பேச வேண்டும்
Recommended Video

அஜய் தேவ்கனுக்கு கேள்வி
பிறர் மீது மொழியைத் திணித்து நாட்டில் நல்லிணக்கத்தை சிதைக்க முயற்சிப்பதா? அவர்கள் பேச விரும்பும் மொழியை பேச மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும்" என்றார். மேலும் அஜய் தேவ்கனுக்கு சரியான பதில் அளித்துள்ள சோனு நிகம், இந்த நாட்டில் மக்களை மேலும் பிளவுபடுத்த வேண்டாம், இந்தி நமது தேசிய மொழி என்று எங்கே எழுதப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications