Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சர்ர்னு பறக்கலாம்! ஸ்லீபர் பெர்த் வந்தே பாரத் + புல்லட் ரயில்.. அமைச்சர் தந்த முக்கிய அப்டேட்

ஸ்லீபர் கோச் வந்தே பாரத் ரயிலில் சுமார் 133 படுக்கை வசதிகள் இருக்கும் என்று கூறப்பட்டுளு்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படுக்கை வசதிகளுடன் கூடிய 'ஸ்லீபர் வந்தே பாரத்' ரயில் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் கூறியுள்ளார்.

இந்தியாவில் ரயில் சேவை உருவாக்கப்பட்ட பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நவீனமயமாக்கப்பட்டது. அப்படி வந்ததுதான் சதாப்தி. சதாப்தி ரயில்கள் நாட்டின் அதிவேகமான ரயில்களில் ஒன்றாகும். இது அதிகபட்சமாக மணிக்கு 140 கி.மீ. இருப்பினும் சராசரியாக 85-93 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால் போபாலிருந்து இயக்கப்படும் சதாப்தி வண்டியானது மணிக்கு 160 கி.மீ வேகம் வரை செல்லும். நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 100வது பிறந்த நாளை கொண்டாடும் விதமாக இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிலையில், இந்த ரயிலுக்கு மாற்றாக 'வந்தே பாரத்' ரயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் நோக்கம் முக்கிய நகரங்களை இணைப்பதாகும். சதாப்தி வண்டி 140 கி.மீ வேகத்தில் இயக்கப்பட்டால், வந்தே பாரத் ரயில் 160 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். அந்த வகையில் முதல் வந்தே பாரத் ரயில் கடந்த 2019ம் ஆண்டு இயக்கப்பட்டது. இதற்கு அமோக வரவேற்பு இருந்த நிலையில் அடுத்தடுத்த ரயில்கள் களத்தில் இறக்கப்பட்டன. இந்த ரயிலில் மொத்தமாக இதில் சுமார் 887 பேர் பணிக்கலாம்.

வசதிகள்

வசதிகள்

இதில் 11 பெட்டிகள் 3AC ஆகவும், 4 பெட்டிகள் 2AC ஆகவும் 1 பெட்டி மட்டும் முதல் ஏசியாகவும் இருக்கும். இதே மாடலில் சுமார் 200 ரயில்களை சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் தொழிற்சாலை தயாரித்து வருகிறது. இந்த ரயில் குறைந்தபட்சம் 500 கி.மீலிருந்து 600 கி.மீ வரை இயக்கப்படுகிறது. ஆனால் இதில் படுக்கை வசதிகள் கிடையாது. தற்போது வரை பயன்பாட்டில் உள்ள ரயில்களில் உட்கார்ந்து செல்லும் (சேர் கார்) வசதி மட்டுமே இருக்கிறது. இந்நிலையில், படுக்கை வசதிகளுடன் கூடிய ரயில்களை தயாரிக்க ரயில்வே துறை முடிவெடுத்தது. அதன்படி வழக்கமான 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரயிலில் படுக்கை வசதிகள் இடம்பெற்றிருக்கும்.

எத்தனை படுக்கைகள்

எத்தனை படுக்கைகள்

இந்த 16 பெட்டிகளில் 3AC வசதியுடன் கூடிய 11 பெட்டிகளில் 61 படுக்கைகளும், 2AC வசதிகளுடன் கூடிய 4 பெட்டிகளில் 48 படுக்கைகளும், முதல் ஏசி வசதி கொண்ட ஒரு பெட்டியில் 24 படுக்கைகளும் இருக்கும். இத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதியும் செய்யப்பட்டிருக்கும். மேலும், ஒவ்வொரு பெட்டியிலும் உதவியாளர்களுக்கு என தனியாக ஒரு படுக்கை வசதி செய்து கொடுக்கப்பட்டிருக்கும். ஆக இப்படியாக தூங்கும் வசதியுடன் கூடிய ரயில்கள் 200 அளவில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டென்டர் இம்மாதத்திற்குள் முடிக்கப்படும் என்றும் ரயில்வே துறை அறிவித்திருந்தது.

அஸ்வினி வைஷ்னவ்

அஸ்வினி வைஷ்னவ்

இந்த ரயில்கள் சென்னை ஐசிஎஃப் மட்டுமல்லாது மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் மராத்வாடா ரயில் பெட்டி தொழிற்சாலையிலும் தயாரிக்கப்படும். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், "படுக்கை வசதியுடன் கூடிய முதல் வந்தே பாரத் ரயில் இந்த ஆண்டு இறுதிக்குள் தயாரிகிவிடும்" என்று கூறியுள்ளார். தொர்ந்து பேசிய அவர், "2026ம் ஆண்டில் ஜூலை-ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில் நாட்டின் முதல் புல்லட் ரயில் சேவையை எதிர்பார்க்கலாம். இதற்கான பணிகள் அகமதாபாத்-மும்பை இடையே வேகமாக நடைபெற்று வருகிறது.

புல்லட் ரயில்

புல்லட் ரயில்

இந்த ரயில்களுக்கான டென்டர் இந்த ஆண்டுக்குள் விடப்படும். இதற்காக தற்போது வரை 140 கி.மீ தொலைவுக்கு ரயில்வே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும், 8 ஆறுகள் மீதும் பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 13 ரயில் நிலைய வழித்தடங்களில் அதிகபட்சமாக 320 கி.மீ வரை நம்மால் ரயில்களை இயக்க முடியும்" என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+