Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விவசாயிகள், பொதுமக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறை இல்லை.. சோனியா காந்தி விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகள் மீதும் பொதுமக்கள் மீதும் மோடி அரசுக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டத்தில் சோனியா காந்தி விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் 26 மசோதாக்களை நிறைவேற்ற ஆளும் அரசு முடிவு செய்திருந்தது. அது போல் 700 விவசாயிகள் உயிரிழப்புக்கு பிறகு வேளாண் சட்டங்கள் ரத்து செய்தது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளும் முடிவு செய்திருந்தன.

இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி கூட்டத் தொடரின் முதல் நாள் வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டன. அந்த சட்டம் இரு அவைகளிலும் கொண்டு நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில் கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் அமளியில் ஈடுபட்டதாக கூறி இந்த கூட்டத் தொடர் முழுவதும் 12 ராஜ்யசபா எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

12 எம்பிக்கள்

12 எம்பிக்கள்

அன்று முதல் 7ஆவது நாளாக இன்று வரை 12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் ராஜ்யசபா தொடர்ந்து 3ஆவது நாளாக பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.

காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள்

காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள்

இந்த நிலையில் இன்று அவை கூடுவதற்கு முன்னர் காங்கிரஸ் நாடாளுமன்ற எம்பிக்கள் கூட்டம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூடியது. அப்போது சோனியா பேசுகையில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டத்தின் போது 700 விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்தனர்.

விவசாயிகள்

விவசாயிகள்

அவர்களின் தியாகத்தை நாம் மதிக்க வேண்டும். விவசாயிகள், பொதுமக்கள் மீது மோடி அரசுக்கு அக்கறையே இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலைஉயர்வால் ஒவ்வொரு குடும்பத்திலும் மாதாந்திர பட்ஜெட்டில் கடுமையான பாதிப்பு ஏற்படுகிறது. எல்லை விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முழு வீச்சில் விவாதம் எழுப்ப வேண்டும்.

போதுமான நடவடிக்கை இல்லை

போதுமான நடவடிக்கை இல்லை


12 எம்பிக்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாதது, ஏற்றுக் கொள்ள முடியாதது. 12 எம்பிக்களுக்கு நாம் ஆதரவு கொடுப்போம். பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலையை குறைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் போதுமானது அல்ல என்றார் சோனியா காந்தி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+