ஓமிக்ரான் அச்சம்.. 5 மாநில தேர்தலுக்கு முன்பு இதை செய்யணும்.. தேர்தல் ஆணையம் ஸ்ட்ரிக்ட் உத்தரவு
டெல்லி: அடுத்தாண்டு தொடக்கத்தில் 5 மாநில தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது.
அடுத்தாண்டு தொடக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் - உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட், மணிப்பூர் மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதில் பஞ்சாப் தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக அல்லது பாஜக கூட்டணி அரசே ஆட்சியில் உள்ளது. இதனால் தேர்தல் மீதான எதிர்பார்ப்புகள் இந்தியா முழுவதும் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரைப் பஞ்சாபில் ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்பதே முதல் இலக்கு. இதனால் தான் அவர்கள் கேப்டன் அமரீந்தர் சிங்கை நீக்கிவிட்டு சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக அறிவித்துள்ளனர். கோவா. மணிப்பூர் மாநிலங்களில் காங்கிரசுக்கு ஆதரவு உள்ளதால் அங்குத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டது. குறிப்பாகக் கோவா தேர்தலுக்கு முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் கூட அறிவிக்கப்பட்டுவிட்டது.

உத்தரப் பிரதேசம்
மறுபுறம் அதிகப்படியான மாநிலங்களில் ஆளும்கட்சியாக உள்ள பாஜகவுக்கு உத்தரப் பிரதேசம் தான் முதல் குறி! பிரதமர் மோடி எம்பியாக உள்ள வாராணாசி தொகுதியும் உள்ளதால் இதை இமேஜ் சார்ந்த விஷயமாகவே பார்க்கிறது பாஜக. இதனால் தான் கடந்த சில வாரங்களில் மட்டும் பிரதமர் மோடியே நேரடியாக உபி வந்து பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். அதேநேரம் அங்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற மாநிலங்கள்
அதேபோல மற்ற மாநிலங்களிலும் கவனத்தைச் செலுத்தத் தொடங்கியுள்ளது பாஜக. உத்தரகண்ட்டில் காங்கிரசில் உட்கட்சி பூசல் ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இதுவும் பாஜகவுக்குச் சாதகமாக மாற வாய்ப்புள்ளது. பஞ்சாபில் அமரீந்தர் சிங் உடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதும் அவர்களுக்குச் சற்று பலமே. கோவா-இல் திரிணாமுல் உள்ளே வருவதால் வாக்குகள் பிரியலாம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு சூழல் உள்ளது.

அலகாபாத் நீதிமன்றம்
இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் ஓமிக்ரான் கேஸ்கள் அதிகரித்து வருவதால் உத்தரப் பிரதேச தேர்தலை ஒத்திவைக்க அலகாபாத் ஐகோர்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஓமிக்ரான் அச்சுறுத்தலைக் கருத்தில் கொண்டு வரவிருக்கும் உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலை ஒத்திவைக்குமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.

நீதிமன்றம் உத்தரவு
அரசியல் கட்சிகள் அரசியல் பேரணிகள், கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதி சேகர் யாதவ் அமர்வு உத்தரவிட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. இது தொடர்பாகச் சுகாதாரத் துறை செயலாளர் தேர்தல் ஆலோசகர் உடன் ஆலோசனையும் நடத்தினார்.
Recommended Video

தீவிர ஆலோசனை
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் ஒவ்வொரு மாநிலத்திலும் தடுப்பூசி விகிதம் எப்படி உள்ளது என்பது குறித்து தகவல்களைத் தேர்தல் ஆணையத்திடம் மத்திய சுகாதார செயலாளர் தெரிவித்தார். உத்தரகண்ட் மற்றும் கோவா மாநிலங்களில் 100% முதல் டோஸ் என்ற இலக்கு விரைவில் எட்டப்படும் எனச் சுகாதாரத் துறை குறிப்பிட்டுள்ளது. உத்தரபிர தேசத்தில் 85% பேருக்கும் மணிப்பூர் மற்றும் பஞ்சாபில் 80% பேருக்கும் குறைந்தபட்சம் ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது

முக்கிய உத்தரவு
இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் முன்னுரிமை அளித்து தடுப்பூசி பணிகளை அதிகரிக்குமாறு சுகாதாரத் துறையிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிக விரைவாக 100% வேக்சின் என்ற இலக்கை அடைய ஏதுவாக வேக்சின் பணிகளை வேகமாக மேற்கொள்ளும்படி சுகாதார அமைச்சகத்தைத் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications