“பனி குல்லா” ஓகே.. “ஹிஜாப்” கூடாதா? நீதிபதி அடித்த “ஜோக்” - உச்சநீதிமன்றத்தில் குபீர் சிரிப்பலை
டெல்லி: ஹிஜாப் வழக்கின் 8 வது நாள் விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பரபரப்பாக நடைபெற்ற நிலையில், நீதிபதிகள் தெரிவித்த கருத்தால் சிரிப்பலை எழுந்தது.
கர்நாடகாவில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து செல்ல அரசு விதித்த தடைக்கு எதிராக உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த கர்நாடக உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் இறுதித் தீர்ப்பை வழங்கியது.
அதில் ஹிஜாப் இஸ்லாத்தில் அத்தியாவசியமானது இல்லை என்றும், பள்ளிகளில் சீருடையை பின்பற்ற வேண்டும் என்ற கர்நாடக அரசின் உத்தரவில் தவறு இல்லை எனவும் கூறி மாணவிகளின் வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

உச்சநீதிமன்றம்
கர்நாடக உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மாணவிகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஹேமந்த் குப்தா, சுதன்சு துலியா அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. கடந்த 8 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டன.

மஃப்ளர், கண்ணாடி
இன்று நடைபெற்ற 8 வது நாள் வழக்கு விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகி கர்நாடக அரசின் ஹிஜாப் தடைக்கு ஆதரவாக வாதாடினார். அப்போது நீதிபதி துலியா, "தேவைப்பட்டால் கண்ணாடி அணிவது, பனி குல்லா அணிவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?" என்று கேட்க, வழக்கறிஞர் மேத்தா, அது மத அடையாளத்தை வெளிப்படுத்தவில்லை." என்றார்.

ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது
உடனே நீதிபதி துலியா, "தொப்பி அல்லது பனி குல்லாவை ஒரே நிறத்தில் அணிய அனுமதிக்கும்போது ஹிஜாபை ஏன் அனுமதிக்கக் கூடாது?" என்று கேட்க, அது மத அடையாளத்தை வெளிப்படுத்தாவிட்டால் அணியலாம் என்றார் வழக்கறிஞர் மேத்தா. அப்போது நீதிபதி துலியா, அப்படியென்றால் இது பொது ஒழுங்கு பிரச்சனையா? என்று கேட்டார்.

உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை
அதற்கு வழக்கறிஞர் மேத்தாவோ, "எங்களுடைய மதநம்பிக்கை ஹிஜாபை அணிய வலியுறுத்துகிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்." என்று கூறினார். உடனே நீதிபதி துலியா, "அவர்கள் சொல்லட்டும். நான் குளிரில் இருந்து பாதுகாக்க அணிகிறேன்." என்று கூற மற்றொரு நீதிபதி குப்தாவோ, "கர்நாடகாவில் அந்த அளவுக்கு குளிர் அதிகம் இருக்காது." என்று சொன்னவுடன் உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications