டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Mission Oxygen: உயிருக்கு போராடுகிறவர்களுக்கு Swasth டெலிமெடிசின் ஆப் எப்படி உதவுகிறது தெரியுமா?

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா 2-வது அலைக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் பற்றாக்குறைகளால் நமது மருத்துவத் துறை கட்டமைப்பு திணறிக் கொண்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் பல உயிர்களை காப்பாற்ற ஆக்சிஜன் சிலிண்டர்கள் பெருமளவு தேவையாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கான சிகிச்சையில் ஆக்சிஜன் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இந்தியாவில்தான் ஆக்சிஜன் பற்றாக்குறை மிக அதிக அளவிலும் இருக்கிறது.

Swasth telemedicine app is crowdfunding to help hospitals save lives on Mission Oxygen

இப்படியான ஒரு சூழலில் Swasth டெலிமெடிசின் ஆப்- Milaap, Ketto, Impact Guru ஆகியவற்றின் மூலமாக ஆக்சிஜன் ஜெனரேட்டர் அல்லது கான்சென்ட்ரேட்டரை பெறுவதற்கான உதவிகளை செய்கிறது. இத்தகைய ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் இந்தியாவில் மிக குறைவான அளவில்தான் தயாரிக்கப்படுகிறது.

ஆகையால் இத்தகைய ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் பெருமளவு இறக்குமதியே செய்யப்படுகிறது. இத்தகைய ஆக்சிஜன் ஜெனரேட்டர் தயாரிப்பாளர்களாக Yuwell, BPL, Medequip, Nidek, Sanrai ஆகியோர் ஏற்கனவே Swasth டெலிமெடிசின் ஆப் உடன் இணைந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

ஒருசில மணிநேரங்களிலேயே 10,000 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களுக்கான ஆர்டர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை 2,00,000 ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் தேவையாக இருக்கிறது. 10,000 ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை பெறுவதற்காக 10மில்லியன் டாலர் நிதி திரட்டும் முயற்சியை Swasth டெலிமெடிசின் ஆப், Milaap, Ketto, Impact Guru ஆகியவற்றின் மூலமாக மேற்கொண்டுள்ளது.

தொடக்க நிலையிலான தேவைகள் என்ன?

அதிக அளவிலான ஆக்சிஜனை தரக் கூடிய ஜெனரேட்டர் விலை ரூ85,000; குறைந்த அளவிலான ஆக்சிஜனை தரக் கூடிய ஜெனரேட்டர் விலை ரூ45,000

ரூ85,000 மதிப்பிலான (1130 டாலர்) ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள 550 நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு உதவும்

ரூ45,000 மதிப்பிலான (600 டாலர்) ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் குறைவான பாதிப்பு உள்ள 900 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க உதவும்.

இந்த மனிதாபிமான உதவிக்கு நீங்கள் எப்படி உதவ முடியும்?

இந்தியாவில் உள்ள தனிநபர்கள் இந்த உதவி திட்டத்தின் கீழ் இணைந்தால் 80G-ன் கீழ் வருமான வரிச்சலுகையை பெற முடியும்.

1. Impactguru-வில் நன்கொடை கொடுக்கலாம் https://www.impactguru.com/fundraiser/oxygen

2 .Milaap-ல் நன்கொடை வழங்கலாம் https://milaap.org/fundraisers/Donate-for-Oxygen

வெளிநாடுகளில் உள்ள தனிநபர்கள் எப்படி உதவலாம்?

Milaap மூலம் உதவ முடியும்.

https://milaap.org/fundraisers/Donate-for-Oxygen.

அமெரிக்கர்கள் 1000 டாலர்கள் நிதி உதவி அளித்தால் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு பெற இயலும்.

மிகப் பெரிய அளவில் உதவி செய்ய விரும்பும் இந்தியர்கள் அல்லது வெளிநாட்டினர்..

ரூ7,50,000 அல்லது 10,000 டாலர் உதவி செய்ய விரும்புவோர் [email protected] என்ற இ மெயிலுக்கு நேரடியாக அனுப்பலாம்.

Corporate Social Responsibility (CSR)-ன் கீழான நிறுவனங்கள் (இந்தியா அல்லது வெளிநாடுகள்) உதவ விரும்பினால் [email protected]க்கு இ மெயில் அனுப்பலாம்.

Swasth.app உடன் இணைந்து நீண்டகால நோக்கில் பயணிக்க விரும்புகிறவர்கள் [email protected]ல் மெயிலில் தொடர்பு கொள்ளலாம்.

சில சந்தேகங்களும் பதில்களும்

ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் எப்போது கிடைக்கும்?

Swasth ஏற்கனவே இது தொடர்பான பணிகளில் செயல்பட்டு வருகிறது. ஆர்டர்களின் எண்ணிக்கையை நிதி திரட்டல் மூலமாக அதிகரித்து கொண்டிருக்கிறோம். இதற்கான காலம் 4 முதல் 6 வாரங்கள் எடுத்து கொள்ளக் கூடும்.

எந்த வகையில் விநியோகிக்கப்படும்?

இந்தியாவுக்கு இறக்குமதி செய்வது மற்றும் தேவைப்பட்ட இடங்களுக்கு அனுப்புவது என்கிற அடிப்படையில் எமது விநியோக செயல்பாடு இருக்கும். பெரும்பாலான நிறுவனங்கள் இரண்டையும் கையாளக் கூடியதாக இருக்கும். மிகப் பெரிய அளவிலான தேவைகள் இருப்பின் சர்வதேச நிறுவனங்கள்/ விமான சேவைகளுடன் இணைந்து இயங்கும்.

தற்போதைய சூழ்நிலையில் எங்கே தேவை இருக்கிறதோ அதற்கு உள்ளூர் நெட்வொர்க் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் கொண்டு செல்லப்படும். உதாரணமாக மகாராஷ்டிராவின் கட்ச்ரோலி, ஒடிஷாவின் கஞ்சம், சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், கர்நாடகாவின் சிக்கபல்லபூர் என எந்த பகுதிக்கும் உள்ளூர் நெட் ஒர்க் மூலம் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் கொண்டு செல்ல முடியும்.

என்னுடைய பங்களிப்பு எப்படி உதவியாக இருக்கிறது என்பதை எப்படி தெரிந்து கொள்ள முடியும்?

இந்த செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத்தன்மையானதாகவே இருக்கும். பொதுவெளியில் இந்த செயல்பாடுகள் பகிரங்கப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும். அப்போது உங்களது பங்களிப்பு எப்படி உதவியாக இருந்தது என்பதை அறிய முடியும்.

English summary
Here is story on Swasth telemedicine app is crowdfunding to help hospitals save lives on Mission Oxygen.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X