டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மோடி செய்ய முயலாததை ஸ்டாலின் செய்கிறார்.. ரகுராம் ராஜன் குழு குறித்து தி டெலிகிராப் பாராட்டு

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் மோடி செய்யாததை தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்ய முயல்வதாக, அவர் ஏற்படுத்திய பொருளாதார ஆலோசனை குழு குறித்து தி டெலிகிராப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

Recommended Video

    சர்வதேச Team-ஐ தட்டி தூக்கிய Tamilnadu அரசு.. எப்படி நடந்தது?

    தமிழகத்தின் பொருளாதாரத்தை சீரமைக்க ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற எஸ்தர் டஃப்ளோ, அரவிந்த் சுப்பிரமணியன், ஜியான் டீரீஸ், எஸ் நாராயணன் ஆகிய 5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார்.

    இதற்கான அறிவிப்பு தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டது. இந்த குழுவினர் மாநிலத்தின் திட்ட கமிஷனுடன் இணைந்து செயலாற்றும்.

    அரவிந்த் சுப்பிரமணியன்

    அரவிந்த் சுப்பிரமணியன்

    ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் மோடி அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிரானவர்கள். அது போல் தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மாநில வளர்ச்சி கவுன்சிலின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரும் மோடி அரசின் பொருளாதார கொள்கையை விமர்சித்தவர்கள்.

    இந்திய பொருளாதாரம்

    இந்திய பொருளாதாரம்

    ரகுராம் ராஜன் ஆர்பிஐ கவர்னராக இருந்த போதே அவர் இந்திய பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லும் பணிகளில் கவனம் செலுத்தினார். எனினும் இவரது பரிந்துரைகளை ஏற்க மோடி அரசு மறுத்துவிட்டது. அன்று மோடி விட்டதை இன்று ஸ்டாலின் பிடிக்க பார்ப்பதாகவே இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

    மாநிலம்

    மாநிலம்

    எந்த அரசாக இருந்தாலும் அது நாட்டுக்கோ, மாநிலத்துக்கோ வளர்ச்சியை கொடுக்குமா என்பதை அதை சுற்றியுள்ள அதிகாரிகளை வைத்து முடிவு செய்யப்படும். அந்த வகையில் இந்த 5 பேர் கொண்ட சூப்பர் டீம் மூலம் தமிழக பொருளாதாரம் நன்கு வளர்ச்சி அடையும் என்றே சொல்லலாம்.

    வரவேற்பு

    வரவேற்பு

    இதை மற்ற பொருளாதார நிபுணர்களும் வரவேற்கிறார்கள். இது குறித்து உலக வங்கியின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு கூறுகையில் பொருளாதார ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது நல்ல செய்தி. ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இவர்களின் ஆலோசனைகளை இந்திய அரசு கேட்டிருந்தால் இன்று இந்திய பொருளாதாரம் எங்கோ சென்றிருக்கும் என தெரிவித்துள்ளார்.

    டெலிகிராப்

    டெலிகிராப்

    ஸ்டாலின் எடுத்த முடிவு குறித்து தி டெலிகிராப் பத்திரிகை பாராட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது மோடி செய்யாததை ஸ்டாலின் செய்ய முயல்கிறார் என தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றது குறித்து ஜியான் டீரீஸ் அந்த செய்தி நிறுவனத்திற்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்.

    பெஸ்ட்

    பெஸ்ட்

    அதில் ஒரு வித தயக்கத்துடனேயே இதற்கு நான் சம்மதித்தேன். பரந்த விவாதத்திலிருந்து விலகி ஒரு தலைபட்ச கொள்கை ஆலோசனையில் எனக்கு நம்பிக்கை இல்லாதது போல் இருக்கிறது. எனினும் நான் கற்றுக் கொண்ட அனுபவம் மூலம் என்னால் முடிந்த அளவுக்கு பெஸ்ட் கொடுப்பேன் என தெரிவித்துள்ளார். நிறைய பொருளாதார நிபுணர்கள் தமிழக அரசை பாராட்டியுள்ளார்கள். தமிழக அரசின் கொரோனா நிவாரணம் ரூ 4000-ஐ பாராட்டிய பொருளாதார மேதை அபிஜித் பானர்ஜியின் மனைவி எஸ்தரும் ஸ்டாலின் அமைத்த பொருளாதார ஆலோசனை குழுவில் அங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Telegraph India says Stalin attempts What Modi wont to do so.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X