டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

''நானும் ரவுடிதான்.. நானும் ரவுடிதான்''.. ஏர்போர்ட்டில் தொழில்அதிபர் அலப்பறை.. கைது செய்த போலீசார்!

Google Oneindia Tamil News

டெல்லி: விமானத்தில் ஏறுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் விமான நிலையத்தில் அதிகாரிகளை மிரட்டிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவில் கொரோனா தாக்கம் ஓரளவு குறைந்த போதிலும் இன்னும் கட்டுக்குள் வராததால் பல்வேறு விமான நிலையங்களில் கொரோனா நெகட்டிவ் கொண்ட சான்றிதழ் கேட்கப்படுகிறது.

உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103 உச்சம் தொட்ட பெட்ரோல் விலை...7 மாநிலங்களில் சதமடித்தது - மும்பையில் 1 லிட்டர் ரூ. 103

இப்படி ஆர்டி-பி.சி.ஆர் பரிசோதனை சான்றிதழ் கொண்டு வருபவர்களே விமானத்தில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

உ.பி. தொழில் அதிபர்

உ.பி. தொழில் அதிபர்

இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் ருத்ராபூரைச் சேர்ந்தவர் சூரஜ் பாண்டே(36)). தொழில் அதிபரான இவர் நேற்று மகாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு செல்வதற்காக டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தார். விஸ்டாரா ஏர்லைன்ஸில் அவர் பயணம் செய்ய இருந்தார். விஸ்டாரா விமான கவுண்ட்டருக்கு சென்று தன்னுடைய விவரங்களை சமர்ப்பித்தார்.

அதிகாரிகள் மறுப்பு

அதிகாரிகள் மறுப்பு

ஆனால் சூரஜ் பாண்டே கொரோனா நெகடிவ் என பரிசோதனை செய்து கொண்ட ஆர்டி-பி.சி.ஆர் சர்பிட்டிகட் கொண்டு செல்லவில்லை. இதனால் அதிகாரிகள் அவரை விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. சூரஜ் பாண்டேஎவ்வளவோ எடுத்துக் கூறியும் அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர். இதற்கிடையே சூரஜ் பாண்டே செல்லவிருந்த விமானமும் கிளம்பி சென்று விட்டது.

நானும் ரவுடிதான்

நானும் ரவுடிதான்

இதனால் கடும் ஆத்திரம் அடைந்த சூரஜ் பாண்டே விமான நிலையத்தில் கடும் கூச்சலிட தொடங்கினார். தன்னை பயணிக்க அனுமதி மறுத்த அதிகாரிகளை நோக்கி திட்ட தொடங்கினார். மேலும் பேக்கேஜ் பெல்ட்டில் ஏறி அதன் மீது நடக்கத் தொடங்கினார். தொடந்து ''நானும் ரவுடிதான்'' ''நானும் ரவுடிதான்'' என்பது போல் அங்கு வந்த பயணிகளை மிரட்டி தடுத்து நிறுத்தினார் சூரஜ் பாண்டே.

அதிரடி கைது

அதிரடி கைது

இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது. இது குறித்து விஸ்டாரா ஏர்லைன்ஸின் துணை மேலாளர் தீபக் தண்டா போலீசில் புகார் கொடுத்தார். இதனை தொடர்ந்து டெல்லி விமான நிலைய போலீசார் தீபக் தண்டாவை அதிரடியாக கைது செய்தனர். விமான நிலையத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அரசு உத்தரவின்படி கட்டாயமாகும். இது இல்லாததால்தான் தொழில் அதிபரை அனுமதிக்கவில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

English summary
The businessman was arrested for allegedly intimidating officials at the airport for refusing permission to board the flight
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X