தெற்கிலிருந்து வரும் சூரியன் இன்று வடக்கு வானத்தை பிரகாசமாக்குகிறது #DelhiWelcomesStalin

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் டெல்லி பயணத்தை முன்னிட்டு ட்விட்டரில் #DelhiWelcomesStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார். முதல்வரான பின்னர் முதல்முறையாக டெல்லி சென்றுள்ள மு.க ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் மு.க ஸ்டாலினின் டெல்லி பயணத்தை முன்னிட்டு ட்விட்டரில் #DelhiWelcomesStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளளது.

Recommended Video

    அந்த சிரிப்பு.. வேகமாக ஓடி வந்த கனிமொழி.. திகைத்து பார்த்த ஸ்டாலின்.. ஏர்போர்ட்டில் நடந்த சம்பவம்

    தமிழக முதல்வராக பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி சென்றுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். இன்று காலை 7.30 மணியளவில் தனி விமானத்தின் மூலம் அவர் டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    தமிழ்நாடு இல்லத்தில் தங்கும் முதல்வர் ஸ்டாலின், இன்று மாலை 5 மணி அளவில் பிரதமர் மோடியை சந்திக்கிறார்.
    இந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டிற்கான திட்டங்கள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் அவர் அளிக்க உள்ளார்.

    முதல்வருடன் அதிகாரிகள் பயணம்

    முதல்வருடன் அதிகாரிகள் பயணம்

    டெல்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் முதல்வரின் தனிச்செயலாளர் உமாநாத் ஐஏஎஸ், முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐஏஎஸ் ஆகியோரும் சென்றுள்ளனர்.

    மோடியுடன் சந்திப்பு

    மோடியுடன் சந்திப்பு

    இந்த பயணத்தின்போது 7 தமிழர்கள் விடுதலை, நீட் தேர்வு ரத்து ஜிஎஸ்டி நிலுவைத்தொகை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    இன்று பிரதமர் உடனான சந்திப்புக்கு பிறகு மத்திய அமைச்சர்களான ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிக்கிறார்.

    மு.க ஸ்டாலினுக்கு வரவேற்பு

    மு.க ஸ்டாலினுக்கு வரவேற்பு

    முதல்வரின் டெல்லி பயணத்தை முன்னிட்டு ட்விட்டரில் #DelhiWelcomesStalin என்ற ஹேஸ்டேக் ட்ரெண்ட் ஆகியுள்ளது. தெற்கிலிருந்து வரும் சூரியன் இன்று வடக்கு வானத்தை பிரகாசமாக்குகிறது!. மாநிலத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் மீது முக்கிய கவனம் செலுத்தும் எங்கள் தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் மு.க ஸ்டாலின், டெல்லி பயணம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    முதல் முறையாக பயணம்

    முதல் முறையாக பயணம்

    மக்கள் தலைவர் மு.க ஸ்டாலின், மதச்சார்பின்மை, சமூக பொருளாதார சமத்துவத்தை நிலைநிறுத்துவதற்கும், நலிந்தவர்களை மேம்படுத்துவதற்கும் முன்னணியில் இருப்பவர், தமிழ்நாட்டின் முதல்வராக டெல்லிக்கு முதல் முறையாக வருகை தருகிறார். அவரை வரவேற்கிறோம் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

    தமிழர்கள் இழந்த நம்பிக்கை

    தமிழர்கள் இழந்த நம்பிக்கை

    தமிழகர்கள் இழந்த நம்பிக்கையை மீட்டு மீண்டும் புத்துயிர் பெற ஒரு பிரகாசமான எடுத்துக்காட்டு, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+