தமிழகத்தில் 3.6% பேருக்கே.. முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது.. அதிர்ச்சி அளிக்கும் தரவுகள்!
டெல்லி: இந்திய மக்கள் தொகையில் இதுவரை 3% பேருக்கே முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தரவுகள் அதிர்ச்சி தகவல் கூறுகின்றன.
Recommended Video
இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தை 3,00,000-ஐ தாண்டிய தொற்று தற்போது 1,00,000-க்குள் அடங்கி விட்டது.
கொரோனா குறைந்து வரும் இந்த வேளையில் நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாநிலமும் தடுப்பூசி தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளன.

தடுப்பூசி பற்றாக்குறை
தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக திட்டமிட்டபடி இந்தியாவில் கடந்த மாதம் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி தொடங்கப்படவில்லை. அனைத்து மாநிலமும் தடுப்பூசியை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. தமிழகத்தில் கூட 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெறும் 3% தான்
ஒருபக்கம் தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்நோக்கி இருந்தாலும், கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும்போது வெறும் 3% தான் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தரவுகள் கூறுகின்றன. அதாவது கடந்த ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை 5 மாதங்களில் 3% பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

டெல்லி பரவாயில்லை
தலைநகர் டெல்லியில் இதுவரை 10.2% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளன. அடுத்தபடியாக குஜராத்தில் 8.8% பேருக்கும், நமது அண்டை மாநிலமான கேரளாவில் 8.1% பேருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் நாட்டில் முதலிடம் பிடித்துள்ள மகாராஷ்டிராவில் 5.3% பேருக்கும், தெலுங்கானாவில் 4.7% பேருக்கும் மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மிக மோசம்
இதில் பீகார் மாநிலம் கடைசி இடத்தை பெற்றுள்ளது. அங்கு 2.5% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நமது மாநிலமான தமிழ்நாடும் இந்த பட்டியலில் மோசமான நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் 4% பேருக்கும் குறைவாக அதாவது 3.6% பேருக்கே இதுவரை முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தரவுகள் அதிர்ச்சி அடைய வைக்கின்றன.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications