ஒன்னு ஒன்னா வருதே.. திக் திக் கிளப்பும் தக்காளி காய்ச்சல்! அறிகுறியும் சோதனையும் சிகிச்சையும்
டெல்லி: இந்தியாவில் தக்காளி காய்ச்சலால் 82 பேர் பாதிக்கப்பட்டு இருப்பதாக சர்வதேச மருத்துவ இதழான லான்செட் வெளியிட்டு இருக்கும் அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதன் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை என்னவென்று பார்ப்போம்.
Recommended Video
கொரோனா, குரங்கு அம்மை என அடுத்தடுத்து புதிய புதிய நோய்களை தடுக்க போராடி வரும் மருத்துவர்களுக்கு புதிய தலைவலியாக வந்திருக்கிறது தக்காளி காய்ச்சல். இந்தியாவில் கடந்த மே 6 ஆம் தேதி கேரள மாநிலத்தில் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், தக்காளி காய்ச்சல் ஒன்று முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெரியவர்களுக்கும் பரவும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பாதிப்பு
இந்த தக்காளி காய்ச்சலின் புதிய வகைகளால் கைகள், பாதங்கள், வாயில் தொற்று ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கே இதுபோன்ற உடல் பாகங்களில் தொற்று ஏற்படும் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் முதன் முதலில் கண்டறியப்பட்ட இந்த தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் கொரோனா வைரசுக்கு வரும் அறிகுறிகளுடன் ஒத்துப்போகிறது.

பெயர் காரணம்
தக்காளி காய்ச்சல் என்பது வைரஸ் தொற்றுக்கு பதிலாக சிக்கன்குனியா அல்லது டெங்கு காய்ச்சலினால் ஏற்பட்ட பின் விளைவுகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஏற்படும் சிவப்பு நிற தடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும் கொப்பளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தக்காளிபோல் பெரிதாவதால் இந்த நோய்க்கு தக்காளி காய்ச்சல் என பெரிடப்பட்டு உள்ளது.

அறிகுறிகள்
இதனால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் அறிகுறிகள் சிக்கன்குனியாவுடன் ஒத்துப்போகும். கடுமையான காய்ச்சல், தடிப்புகள், மூட்டு போன்ற இணைப்பு பகுதிகளில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். உடல் வலி, காய்ச்சல், உடல் சோர்வு போன்ற கொரோனா நோயாளிக்கு வரும் அறிகுறிகளும் இதில் ஏற்படும். வயிற்றுப்போக்கு, நீர்ப்போக்கு, மூட்டு வலி, மூட்டு வீக்கம், குமட்டல் ஆகியவையும் இதற்கான அறிகுறிகளாக கூறப்படுகின்றன.

சோதனை
மேற்கண்ட அறிகுறிகளை கொண்ட நோயாளிகளுக்கு டெங்கு, சிக்கன்குனியா, ஜிகா வைரஸ், ஜோஸ்டர் வைரஸ் போன்ற நோய்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனைபோல் மூலக்கூறு மற்றும் செராலஜிகல் சோதனைகள் நடத்தப்படும். இந்த வைரஸ் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டால் தக்காளி வைரஸ் பாதிப்பு உறுதிபடுத்தப்படும்.

சிகிச்சை
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிக்கன்குனியா, டெங்கு போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் அதே சிகிச்சைதான் அளிக்கப்படுகிறது. நோயாளிகள் தனிமைப்படுத்திக் கொள்ளவும், ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். அதிகமான நீர் ஆகாரங்களை உட்கொள்ளவும், பஞ்சில் சுடு நீர் தொட்டு உடலில் ஒத்தனம் கொடுத்தால் எரிச்சலும், வீக்கமும் குறையும். காய்ச்சல் மற்றும் உடல் வலிக்காக பாராசிட்டமால் மாத்திரிகைகளை உட்கொள்ளலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
-
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2!












Click it and Unblock the Notifications