டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குட்டியுடன் தண்டவாளத்தை கடக்க வந்த யானை.. ப்ரேக் பிடித்து ரயிலை நிறுத்திய டிரைவர்கள்... வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: யானை அதன் குட்டியுடன் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதைப் பார்த்ததும் அவசர ப்ரேக் அழுத்தி, ரயிலை நிறுத்திய டிரவைர்களின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவில் ஆண்டுதோறும் பல நூறு யானைகளில் தண்டவாளங்கள் கடக்கும்போது, ரயிலில் அடிப்பட்டு உயிரிழக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கிறது. இதைத் தடுக்க ரயில்வே துறை அமைச்சகம் ரயில் ஓட்டுநர்களுக்குப் பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன.

Train drivers quick decision saves elephant and her baby

இது தொடர்பாக ரயில் ஓட்டுநர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் ரயில்களைக் குறைந்த வேகத்தில் இயக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காடுகள் இருக்கும் பகுதிகளில் ரயில்களை மிகக் கவனமாக இயக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகிழக்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் ரயிலின் ஓட்டுநர்கள் சமயோஜிதமாக செயல்பட்டதால் யானையும் அதன் குட்டியும் விபத்திலிருந்து தப்பியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன், இரு ஓட்டுநர்கள் வழக்கம் போல தங்கள் ரயிலை இயக்கியுள்ளனர்.

காட்டுப்பகுதி ஒன்றில் யானை அதன் குட்டியுடன் ரயில் தண்டவாளத்தைக் கடப்பதைப் பார்த்ததும் இந்த டிரைவர்கள் உடனடியாக அவசர ப்ரேக் அழுத்தி, ரயிலை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த யானை, அதன் குட்டியுடன் பத்திரமாக தண்டவாளத்தைக் கடந்து சென்றது.

இது தொடர்பான வீடியோ ஒன்றை வட கிழக்கு ரயில்வே துறையில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டரில் பகிர்ந்திருந்தார். இது வீடியோ உடனடியாக வைரல் ஆனது. யானைகளுக்காக டிரவைர்கள் ரயிலை உடனடியாக நிறுத்தியதற்கு இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.

English summary
Viral video of Train drivers' decision to saves elephant and her baby.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X