வருமான வரி சோதனைகளுக்கு இடையே.. ஆக்ஸ்பாம் அறிக்கை.. பொது நலனுக்காக பணியாற்றுவோம் என அதிரடி
டெல்லி: இந்திய சமூகத்தில் நிலவும் வறுமை, பொருளாதார ஏற்றதாழ்வு குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆக்ஸ்பாம் நிறுவனம் மீதும், அரசின் கொள்கைகளை விமர்சிக்கும் 'அறிவு ஜீவி' குழுமம் (CPR) மீதும் சமீபத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய நிலையில் தற்போது ஆக்ஸ்பாம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஆக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கையில், "பொதுநலன் கருதி தொடர்ந்து தாங்கள் பணியாற்றுவோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரெய்டு நடவடிக்கை ஆக்ஸ்பாம் நிறுவனத்தை முடக்கும் செயல் என அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது 'ஆக்ஸ்பாமின்' அறிக்கை முக்கியத்தும் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக ரெய்டு குறித்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், "சுமார் 35 மணி நேரம் நடத்தப்பட்ட ரெய்டில், இணையம் உள்ளிட்ட சேவைகள் முழுமையாக முடக்கப்பட்டது" என்று கூறியிருந்தனர்.

பின்னணி
போலியான முறையில் நன்கொடை பெறுவது மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட பணமோசடியில் ஈடுபடும் அரசியல் கட்சிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்கும்படி கடிதம் வழியே தேர்தல் ஆணையம் வலியுறுத்தியிருந்தது. இதனையடுத்து தேர்தல் ஆணையத்திடம் பதிவுசெய்து, அங்கீகாரம் பெறாத அரசியல் கட்சிகளுக்கு எதிராக வருமானவரித் துறையினர் தற்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வருமான வரி துறை அறிக்கையின்படி, 2018-19-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்படாத 199 அரசியல் கட்சிகள் ரூ.445 கோடி மதிப்பிற்கு வரி விலக்கு பெற்றுள்ளன. இதுவே, 2019-20-ம் ஆண்டில் இதுபோன்ற 219 அரசியல் கட்சிகள், வருமான வரி துறையிடம் இருந்து ரூ.608 கோடி வரி விலக்கு பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சோதனை
இந்நிலையில், வருமான வரித்துறையினர் பல்வேறு மாநிலங்களில் அதிரடி ரெய்டில் ஈடுபட்டனர். அதன் தொடர்ச்சியாக பெங்களூரை சேர்ந்த ஐபிஎஸ்எம்எஃப் நிறுவனத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையை மேற்கொண்டனர். இந்நிறுவனம், ஆக்ஸ்பாம் இந்தியா, தி கேரவன், தி பிரின்ட் மற்றும் ஸ்வராஜ்யா போன்ற டிஜிட்டல் ஊடகங்களுக்கு நிதியளித்து வருகிறது. மட்டுமல்லாது 'ஆக்ஸ்பாம்' நிறுவனத்தின் மீதும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

எதிர்ப்பு
இந்த ரெய்டு நடவடிக்கைக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், "பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின் பேரில் CPR, Oxfam, IPSMF போன்ற நிறுவனங்கள் மீது ரெய்டு நடத்தப்பட்டிருப்பது மிகவும் கொடூரமானது. இது தன்னுரிமையுடன் சுதந்திரமாக இயங்கும் அனைத்து ஊடகங்களின் குரல்களையும் அழித்தொழிக்கும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கை" என்று கூறியிருந்தார்.

கண்டனம்
அதேபோல இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், "ஊழல் கள்ளக் கூட்டின் வழியாக கோடிகளில் செல்வம் குவிப்போர் மகிழ்ந்திருக்க, அதை கேள்வி எழுப்புவோர் மீது மத்திய அரசு பாய்ந்திருப்பது அப்பட்டமான சர்வாதிகார நடவடிக்கையே. தங்களின் பொய் மூட்டைகளை, கேள்விகளால் அவிழ்க்கும் எவரையும் விடக் கூடாது என்ற எத்தனிப்பிலேயே இந்த அடக்குமுறைகள் ஏவப்படுகின்றன. குறைந்தபட்ச விமர்சன குரலைக் கண்டும் கூட மோடி அரசாங்கம் அஞ்சி நடுங்குவது இதன் வழியாக அம்பலமாகியுள்ளது" என்று விமர்சித்திருந்தார்.

அறிக்கை
இந்நிலையில் இந்த ரெய்டு குறித்து CPR, Oxfam, IPSMF நிறுவனங்கள் எதையும் கூறவில்லை. ஆனால் இன்று "பொதுநலன் கருதி தொடர்ந்து பணியாற்றுவோம்" என ஆக்ஸ்பாம் நிறுவனம் தெரிவித்துள்ளதாக என்டிடிவி செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ரெய்டு நடவடிக்கை இப்போதுதான் நடந்திருந்தாலும், இதற்கு முன்பிருந்தே சில நெருக்கடிகளை ஆக்ஸ்பாம் சந்தித்து வந்துள்ளது. அதாவது, கடந்த எட்டு மாதங்களாக இந்த நிறுவனம் சில நெருக்கடிகளை சந்தித்து வந்ததாக கூறுகிறது. குறிப்பாக 'ஆக்ஸ்பாம் இந்தியா' நிறுவனத்திற்கு அதன் FCRA புதுப்பித்தல் உரிமத்தை கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்துறை அமைச்சகம் மறுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications