டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டெர்லைட்டை மூடியதே நல்லது.. தூத்துக்குடியில் நீர் தரம் உயர்ந்துள்ளது.. அரசு ஹைகோர்ட்டில் பதில்!

ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடியில் நிலத்தடி நீர் தரம் உயர்ந்துள்ளது என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு தூத்துக்குடியில் நிலத்தடி நீர் தரம் உயர்ந்துள்ளது என்று சென்னை ஹைகோர்ட்டில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் கடும் எதிர்ப்பிற்கு இடையில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலை கடந்த மே 28-ம் தேதி தமிழக அரசால் மூடப்பட்டது. இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வழக்கு தொடுத்தது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது.

ஆனால் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தீர்ப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

ரூ.15 லட்சம் அல்ல... அட்லீஸ்ட் 15 ரூபாயாவது மோடி மக்களுக்கு கொடுத்தாரா? ஸ்டாலின் கேள்வி! ரூ.15 லட்சம் அல்ல... அட்லீஸ்ட் 15 ரூபாயாவது மோடி மக்களுக்கு கொடுத்தாரா? ஸ்டாலின் கேள்வி!

அனுமதிக்க முடியாது

அனுமதிக்க முடியாது

இந்த வழக்கில் சில வாரங்களுக்கு முன் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளிக்க முடியாது, தமிழக அரசின் முடிவு சரிதான், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் இது தொடர்பாக சென்னை ஹைகோர்ட்டில் முறையிடும்படி சுப்ரீம் கோர்ட் கூறியது.

ஸ்டெர்லைட் ஆலை

ஸ்டெர்லைட் ஆலை

இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக வேதாந்த நிறுவனம் சென்னை ஹைகோர்ட்டில் தொடுத்த வழக்கில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. இன்று நடந்த வழக்கில் இன்று முக்கியமான விசாரணைகள் நடந்தது. தமிழக அரசு, ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்கு திறக்க அனுமதிக்க அளிக்க வேண்டும் என்று ஹைகோர்ட்டில் கோரிக்கை வைத்தது வேதாந்தா நிறுவனம்.

ஆலை அனுமதி

ஆலை அனுமதி

இதற்கு தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதில் தூத்துக்குடியில் நிலத்தடி நீர் தரம் உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய பிறகு நீர் தரம் உயர்ந்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இவ்வளவு வருடங்களாக தூத்துக்குடி நீர் வளத்தை நாசம் செய்து வந்தது. தற்போது அது சரியாகி இருக்கிறது.

இயற்கை மாசுபடும்

இயற்கை மாசுபடும்

ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி வழங்கினால் இயற்கை மேலும் மாசுபடும். நீரின் நிலை மோசமாகும். இதனால் ஸ்டெர்லைட் ஆலையை தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ இயங்க அனுமதி வழங்க கூடாது, இல்லையென்றால் அங்கு நீர்நிலை மோசமாக பாதிக்கப்படும், என்று கூறியது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

English summary
Tuticorin Water level increased after Sterlite closure says TN Govt in MHC case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X