ஜம்மு காஷ்மீர் தனி நாடு.. சர்ச்சையை கிளப்பிய ட்விட்டின் புதிய மேப்.. கடும் கோபத்தில் மத்திய அரசு
டெல்லி: மத்திய அரசுக்கும் ட்விட்டருக்கும் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ட்விட்டர் தளத்தில் இந்தியா மேப்-இல் இருந்த பிரித்து காஷ்மீரை தனியாகக் காட்டியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டிலுள்ள சமூக வலைத்தளங்களுக்கும் ஓடிடி தளங்களுக்கும் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தியது. இந்த புதிய சட்டத்தை மற்ற அனைத்து தளங்களும் ஏற்றுக் கொண்ட போதிலும், ட்விட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை.
இதனால் மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் நிலவி வருகிறது.

தனி நாடு
இந்தச் சூழ்நிலையில். ட்விட்டரிலுள்ள உள்ள மேப் ஒன்றில் ஜம்மு & காஷ்மீர், லடாக் பகுதிகளை இந்தியாவின் ஒரு அங்கமாகக் காட்டாமல் வேறு ஒரு நாடாகக் காட்டியுள்ளது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ட்விட்டர் தளத்தில் Tweep Life என்ற செக்ஷனில் தான் ஜம்மு & காஷ்மீர் இப்படித் தனி நாடாகக் காட்டப்பட்டுள்ளது. இது ட்விட்ரில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடும் நடவடிக்கை
ட்விட்டர் நிறுவனத்தின் இந்தச் செயலுக்கு எதிராகப் பலரும் தங்கள் எதிர்ப்புகளைப் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கனவே, புதிய ஐடி விதிகளுக்கு உட்படாமல் இருப்பது, அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ட்விட்டர் பக்கம் முடக்கம் என பல்வேறு விஷயங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் மீது மத்திய அரசு கடும் கோபத்தில் உள்ளது. இதனால் அந்நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறை இல்லை
ட்விட்டர் நிறுவனம் இந்தியாவின் மேப்-ஐ இப்படி தவறாகக் காட்டுவது இது ஒன்றும் முதல் முறை இல்லை. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லடாக் யூனியன் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாக ட்விட்டர் காட்டியது. இதனைக் கடுமையாகக் கண்டித்த மத்திய அரசு, இது தொடர்பாக ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜேக் டார்ஸிக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பின்னரே ட்விட்டர் தனது தவறை சரி செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

குறைதீர்ப்பு அதிகாரி
முன்னதாக, புதிய ஐடி விதிகளின்படி ட்விட்டரின் இடைக்கால அதிகாரியாக தர்மேந்திரா சாத்தூர் இன்று ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து கலிபோர்னியாவை சேர்ந்த ஜெர்மி கேசல் என்பவரை ட்விட்டர் இந்தியாவின் புதிய குறைதீர்ப்பு அதிகாரியாக அந்நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இருப்பினும், அரசின் ஐடி விதிகளின்படி இந்தியர் ஒருவரைத் தான் இந்தப் பொறுப்பில் நியமிக்க வேண்டும். மத்திய அரசுக்கும் டவிட்டருக்கும் இடையே இருக்கும் மோதலில் இதுவும் புதிதாக இணைந்துள்ளது.
-
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங்












Click it and Unblock the Notifications