பாகிஸ்தானுக்கு செக் வைத்த இந்தியா! பாக்.கில் படித்தால் வேலை கிடைக்காது! மாணவர்களுக்கு பறந்த உத்தரவு!
டெல்லி : அண்டை நாடான பாகிஸ்தானுக்கு படிக்கச் சென்றால் வேலையோ, உயர்கல்வியோ இந்தியாவில் கிடைக்காது என இந்திய மாணவர்களை உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ எச்சரித்துள்ளது.
பாகிஸ்தானில் கிட்டத்தட்ட 200 இந்திய மாணவர்கள் படிப்பதாக கடந்த 2020அம் ஆண்டு தகவல் வெளியானது. அங்கு படிக்கும் மாணவர்களில் பெரும்பாலோர் ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள்.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரிப்பதற்கு முன்னதாக அவர்கள் பாகிஸ்தான் உள்ள பல்கலைக்கழகங்களில் சேர்க்கப்பட்ட நிலையில், தற்போது படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்த சமீபத்திய தரவுகள் எதுவும் தற்போது கிடைக்கவில்லை.

பாகிஸ்தான் கல்வி
இந்நிலையில் அண்டை நாடான பாகிஸ்தானுக்கு படிக்கச் சென்றால் வேலையோ, உயர்கல்வியோ இந்தியாவில் கிடைக்காது என இந்திய மாணவர்களை உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ எச்சரித்துள்ளன. இந்தியாவின் உயர்கல்வி கட்டுப்பாட்டு அமைப்புகளான பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) ஆகியவை வெள்ளிக்கிழமை கூட்டாக ஆலோசனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ
அதில் இந்திய மாணவர்கள் பாகிஸ்தானில் உள்ள எந்தவொரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்திலும் சேர வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளனர். நாட்டில் வேலை தேடுவதற்கு அல்லது உயர் கல்வியைத் தொடர தகுதியுடையவராக இருக்க பாகிஸ்தானில் படித்திருக்கக் கூடாது. சீனாவில் படிப்பதற்கு எதிராக இந்திய மாணவர்களை யூஜிசி கடந்த மாதம் எச்சரித்த நிலையில், தற்போது பாகிஸ்தானிலும் படிக்கக் கூடாது என யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு எச்சரிக்கை
ஏற்கனவே சீனப் பல்கலைக்கழகங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு விசா வழங்காததன் பின்னணியில் சீனாவுக்கு எதிரான எச்சரிக்கை இருந்த நிலையில், தற்போது பாகிஸ்தானுக்கு எதிரான ஆலோசனைக்கு காரணன் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்கனவே உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கானுக்கு பிறகு ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றாலும் இந்த மோதல் போக்கில் மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்களுக்கு தடை
இந்நிலையில், AICTE உறுப்பினர் செயலாளரும் UGC செயலாளரும் வெளியிட்ட அறிக்கையில் "உயர் கல்வியைத் தொடர பாகிஸ்தானுக்குச் செல்ல வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவுறுத்தப்படுகிறார்கள்."என கூறப்பட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பாகிஸ்தானின் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு கல்லூரியில்/கல்வி நிறுவனத்தில் சேர்க்கை பெற விரும்பும் எந்தவொரு இந்திய நாட்டவரும் அல்லது இந்தியாவின் வெளிநாட்டுக் குடிமகனும், பாகிஸ்தானில் பெற்ற கல்வித் தகுதிகளின் அடிப்படையில் (எந்தப் பாடத்திலும்) இந்தியாவில் வேலை தேடுவதற்கு அல்லது உயர்கல்வி பெறத் தகுதி பெற மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கல்வி நிறுவனங்கள்
அதே நேரத்தில் பாகிஸ்தானில் உயர்கல்வி பட்டம் பெற்ற மற்றும் இந்தியாவினால் குடியுரிமை பெற்ற புலம்பெயர்ந்தோர் மற்றும் அவர்களது குழந்தைகள், MHA இலிருந்து பாதுகாப்பு அனுமதியைப் பெற்ற பிறகு, இந்தியாவில் வேலை தேடத் தகுதியுடையவர்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் UGC பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டது. இதனால் பாகிஸ்தானில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே குறைவாக இருக்கும் நிலையில், சமீபத்திய அறிவுரை மேலும் தடையாக செயல்பட வாய்ப்புள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications