பட்ஜெட் 2023: ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு? அரசு அதிகமாக செலவிடுவது வட்டி கட்டத்தான்!
ஒரு ரூபாயில் வரவு - செலவு எவ்வளவு என்ற விவரம் மத்திய அரசின் பட்ஜெட்டில் விளக்கப்பட்டுள்ளது.
டெல்லி : மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், ஒரு ரூபாயில் வரவு - செலவு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. இதில் அதிகபட்சமாக வட்டி செலுத்துவதற்கு 20 பைசாவும், மாநிலங்களுக்கான வரி பகிர்வுக்காக 18 பைசாவும் செலவிடப்படுகிறது.
அதிகபட்சமாக கடன்கள் மற்றும் பிற சொத்துகள் மூலமாக 34 பைசாவும், ஜி.எஸ்.டி மற்றும் இதர வரிகள் மூலமாக 17 பைசாவும், வருமான வரி மற்றும் வர்த்தக வரி மூலமாக தலா 15 பைசாவும் வருவாயாக மத்திய அரசுக்கு கிடைக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு தனது கடைசி முழு பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், வலுவான பொது நிதியையும் நிதித்துறையையும் உருவாக்க இந்த அரசு இலக்காக கொண்டிருக்கிறது எனத் தெரிவித்தார்.
பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியிருக்கும் நிலையில், 1 ரூபாயில் வரவு செலவு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று 2வது நாள் அமர்வு நடைபெற்றது. இன்றைய அமர்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தான் இரண்டாவது முறையாக அமைந்த மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் கடைசி பட்ஜெட் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ப்ளூ ப்ரிண்ட்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றுகையில், இந்தியப் பொருளாதாரம் ஒளிரும் நட்சத்திரம் என்றும், இது தொழிற்துறையினருக்கான பட்ஜெட் என்றும் கூறினார். மேலும், இந்த பட்ஜெட் அடுத்த 100 ஆண்டுகளுக்கான புளூ பிரிண்ட்டாக இருக்கும் என்றும் விவசாய கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது உள்பட 7 முக்கிய அம்சங்கள் அடங்கியதாக இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

வரவு - செலவு
மேலும், அடுத்த நிதியாண்டில் வரி வருவாய் 23.3 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் எனவும் மாநிலங்கள் தங்களது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.5 சதவீதம் வரை நிதி பற்றாக்குறையை வைத்துக் கொள்ளலாம் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2022-23ஆம் நிதியாண்டில் வருவாய்க்கும் செலவுக்கும் இடையே உள்ள வித்தியாசம் 16,61,196 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சர் கூறியுள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டில், நாட்டின் வரவு - செலவு ஒரு ரூபாயில் விளக்கப்பட்டுள்ளது.

ஒரு ரூபாயில் வரவு
அதன்படி, நாட்டின் வருவாயில் ஒவ்வொரு ரூபாய்க்கும், 58 பைசா நேரடி மற்றும் மறைமுக வரிகளிலிருந்து கிடைக்கிறது. ஒரு ரூபாயில் வருமான வரி மூலம் 15 காசுகள் பெறப்படுகின்றன. மத்திய வரிகள் மூலம் 7 பைசா கிடைக்கிறது. கம்பெனிகள் வரிகள் மூலம் 15 பைசா கிடைக்கிறது. சரக்கு மற்றும் சேவை வரிகள் (ஜிஎஸ்டி) மூலம் 17 பைசா கிடைக்கிறது. கடன்கள் மற்றும் இதர வருவாய் மூலம் 34 பைசா பெறப்படுகிறது. வரியில்லா வருமானங்கள் மூலம் 6 பைசா கிடைக்கிறது. கடனில்லா முதலீட்டு வருவாய் மூலம் 2 பைசா கிடைக்கின்றன. கலால் வரி மூலம் 4 பைசா கிடைக்கிறது.

ஒரு ரூபாயில் செலவு
செலவினத்தைப் பொறுத்தவரை மிகப்பெரிய செலவினம் வட்டி செலுத்துதல் தான். வட்டி செலுத்துதலுக்கு ஒவ்வொரு ரூபாய்க்கும் 20 பைசா செலவிடப்படுகிறது. அதைத் தொடர்ந்து மாநிலங்களின் வரி பகிர்விற்காக 18 பைசா செலவிடப்படுகிறது. ஒரு ரூபாயில் பென்சன் திட்டங்களுக்காக 4 பைசா செலவிடப்படுகிறது. இதர செலவுகளுக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. நிதி ஆணையம் மற்றும் பிற இதர பரிமாற்றங்களுக்காக 9 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்காக 17 பைசா செலவிடப்படுகிறது. பாதுகாப்புத்துறைக்கு 8 பைசா செலவிடப்படுகிறது. மானியங்களுக்காக 7 பைசா செலவிடப்படுகிறது. மத்திய அரசின் நிதி உதவி மூலம் நடத்தப்படும் திட்டங்களுக்கு 9 பைசா செலவிடப்படுகிறது.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications