டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி

Google Oneindia Tamil News

டெல்லி: சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

விவசாயிகளின் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தகம் சட்டம் 2020, விவசாயிகளின் விலை நிர்ணய பாதுகாப்பு ஒப்பந்தம், விவசாய சேவைகள் சட்டம் 2020, அத்தியாவசிய பொருட்கள் திருத்தச்சட்டம் 2020 ஆகியவை கடந்த ஆண்டு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டன.

ஆனால் இந்த மூன்று சட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறி விவசாயிகளின் ஒரு பிரிவினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் தீவிர போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர் . உத்தர பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த போராட்டம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டது.

என்னப்பா நடக்குது... கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக மாஜி எம்.எல்.ஏவை அலேக்காக தூக்கியது பாஜக!என்னப்பா நடக்குது... கூட்டணியில் இருக்கும்போதே அதிமுக மாஜி எம்.எல்.ஏவை அலேக்காக தூக்கியது பாஜக!

டிவியில் மோடி

டிவியில் மோடி

சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் தோன்றி உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்தார். பிரதமர் அறிவித்த போதிலும் கூட இந்த முடிவிற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டியது அவசியம் இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

குளிர்கால கூட்டத் தொடர்

குளிர்கால கூட்டத் தொடர்

எனவே மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் சமர்ப்பித்து வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை மட்டுமே இனிமேல் எஞ்சியிருக்கிறது. பிரதமர் உறுதிமொழி அடித்து இருந்தாலும்கூட மூன்று சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகுதான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.

மைல் கல்

மைல் கல்

தற்போது மத்திய அமைச்சரவை சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு ஒப்புதல் வழங்கி விட்டது. இது ஒரு முக்கியமான மைல் கல் ஆகும். எனவே விவசாயிகள் போராட்டத்தை கைவிடுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதுதொடர்பாக விவசாய சங்கத்தினர் இன்னமும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

Recommended Video

    சட்ட அங்கீகாரம் வரும்வரை போராட்டம் தொடரும் | Tamilnadu Samyukt Kisan Morcha | Oneindia Tamil
    போராட்டம்

    போராட்டம்

    தற்போது குளிர்காலம் ஆரம்பித்துவிட்டதால் போராடும் விவசாயிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். எனவே அமைச்சரவை முடிவை கருத்தில் எடுத்துக் கொண்டு அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒருவேளை இப்போது போராட்டத்தைக் கைவிடாமல் நாடாளுமன்றத்தில் அந்த மூன்று சட்டங்களை வாபஸ் பெறப்படுவதாக தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்ட பிறகுதான் போராட்டத்தை கைவிடவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    English summary
    The Union Cabinet on November 24 approved the proposal to withdraw three controversial farm laws that triggered year-long protests by thousands of farmers, sources said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X