நிதி குறைப்பு- மாநிலங்கள் தலையில் மத்திய அரசு திட்டங்கள்:நிர்மலா சீதாராமனுடன் மோதிய தங்கம் தென்னரசு!
டெல்லி: மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு தமது பங்களிப்பாக சொற்ப நிதி ஒதுக்கீடு செய்துவிட்டு மாநிலங்களின் தலையில் கட்டிவிடுகிறது என தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புள்ளி விவரங்களுடன் விளக்கினார்.
டெல்லியில் பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று பேசியதாவது: மத்திய அரசின் நிதியுதவிடன் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதிச்சுமையை மாநில அரசுகளின் மீது மத்திய அரசு படிப்படியாக சுமத்தி வருகிறது.

பல்வேறு திட்டங்களுக்கான ஒதுக்கீடுகள் இன்றைய செலவினங்களின் அடிப்படையில் போதுமானதாக இல்லாததால், திட்டச் செலவினங்களில் பெரும்பகுதியை மாநில அரசுகள் ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
உதாரணமாக,
• பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின் (நகர்ப்புரம்) வீட்டுவசதி' திட்டத்தின் கீழ், மத்திய அரசு வீடு ஒன்றிற்கு 1.5 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்குகிறது, அதேநேரத்தில் தமிழ்நாடு அரசு ஒன்றிற்கு 12-14 இலட்சம் ரூபாயை தனது பங்களிப்பாக வழங்குகிறது.
• பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டத்தின்(கிராமப்புறம்) கீழ், மத்திய அரசு வீடு ஒன்றிற்கு 0.72 இலட்சம் ரூபாய் மட்டுமே வழங்கும் நிலையில் மாநில அரசு வீடு ஒன்றிற்கு 1.68 இலட்சம் ரூபாயை தன் பங்களிப்பாக வழங்கி வருகிறது.
•தேசிய சமூக நிதியுதவித் திட்டத்தின் கீழ், மத்திய அரசு, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதந்தோறும் 200 ரூபாய் மற்றும் ஒவ்வொரு விதவைகள் மற்றும் மாற்றுத் திறனாளி பயனாளிகளுக்கும் மாதம் 300 ரூபாய் மட்டுமே தனது பங்களிப்பாக வழங்குகிறது. இத்தொகை கண்ணியமான வாழ்க்கை நடத்துவதற்குப் போதுமானதாக இல்லாததால், மற்ற மாநிலங்களைப் போலவே தமிழ்நாடு மாநிலமும் இத்தொகையை உயர்த்தி, இவ்வகையைச் சேர்ந்த ஒவ்வொரு பயனாளிகளுக்கும் மாதாந்திர ஓய்வூதியமாக 1,200 ரூபாயை வழங்குகிறது.
எனவே, தற்போதைய தேவைகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு தனது பங்களிப்பு தொகையை அதிகரித்து, மத்திய அரசு நிதியுதவி வழங்கும் திட்டங்களில் குறைந்தபட்சம் 50% பங்களிப்பை வழங்க வேண்டுமென ஒன்றிய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன். மேலும் மாநில திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்யும்போது, அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் பின்பற்றக்கூடாது என மத்திய அரசுக்கு நான் மீண்டும் வலியுறுத்துகிறேன்.
அதற்குப் பதிலாக மத்திய அரசு கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களை காப்பதற்காக, மாநில அரசுகளுடன் கூட்டாக இணைந்து, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு உதவ வேண்டும். இவ்வாறு தங்கம் தென்னரசு பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications