முகலாயர்கள் பற்றியே வரலாற்றில் எழுதி வைத்துள்ளார்கள்.. சோழ, பாண்டிய, பல்லவர் எங்கே? அமித் ஷா கேள்வி
டெல்லி: உண்மையான வரலாற்றை எழுத வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவும் இதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மத்திய அமைச்சர் அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.
தலைநகர் டெல்லியில் மருத்துவர் ஒமேந்திர ரத்னு என்பவர் எழுதிய "மஹாராணாஸ்: தர்மத்திற்கான ஆயிரம் வருடப் போர்" என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
அப்போது பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேசிய அமைச்சர் அமித் ஷா, உண்மையான வரலாற்றைக் கூற வேண்டிய நேரம் வந்துவிட்டதாகக் குறிப்பிட்டார். மேலும், உண்மையை விளக்குவதைத் தவிர்க்க முடியாது என்றும் தெரிவித்தார்.

அமித் ஷா
இந்திய வரலாற்றில் உள்ள திரிபுகளை விவாதிப்பதில் நேரத்தை வீணடிக்காமல், வரலாற்றைச் சரியான முறையில் எழுத ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அமைச்சர் அமித் ஷா கூறினார், 1,000 ஆண்டுகளாக அந்நிய ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட போர், மறுசீரமைப்பிற்கு அடித்தளம் அமைத்தது என்றும் இந்தியா இப்போது ஒரு பெருமைமிக்க நாடாக உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்

1000 ஆண்டுகள்
இது குறித்து அமைச்சர் அமித் ஷா மேலும் கூறுகையில், "வரலாறு அதை எழுதுபவர்களின் கருத்துக்கள் மற்றும் பார்வையின் அடிப்படையில் இல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது ஒரு பொதுவான ஒரு முயற்சியாக இருக்க வேண்டும். அரசு விருப்பம் அல்லது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது. 1,000 ஆண்டுகளாக நமது கலாசாரம், மொழி மற்றும் மதத்திற்கான போராட்டம் வீண் போகவில்லை. இன்று நாடு மீண்டும் மரியாதையுடன் நிற்கிறது. இந்திய வரலாற்றில் ஏற்படும் திரிபுகள் குறித்து நாங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் நான் கேட்கிறேன். ஏன் தொடர்ந்து புகார் சொல்ல வேண்டும். நாம் புதிய வரலாற்றை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது.

வரலாறு
உண்மைகளின் அடிப்படையிலான வரலாற்றைப் பொதுமக்களுக்கு முன்பு முன் வைக்க வேண்டும், இது பொய்களைத் தானாகவே அழிக்கும். வரலாறு வெற்றி தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை, மாறாக அந்த நிகழ்வின் முடிவின் அடிப்படையில்தான் வரலாறு எழுதப்படுகிறது. அரசு மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படவில்லை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் உருவாக்கப்படுகிறது. தாய்நாடாகக் காக்கப் பல துணிச்சலான வீரர்கள், மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் வெளிநாட்டு படையெடுப்பிற்கு எதிராக போராடினர். பல வம்சங்கள் மண்ணுக்காகப் பல தலைமுறைகளாகப் போராடியிருக்கின்றன. இந்த புத்தகம் நமது பெரிய முன்னோர்களின் வீரம் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு முக்கிய படியாகும்.

விரக்தி
எந்தவொரு சமூகமும் தனது எதிர்காலத்தைப் பிரகாசமாக மாற்ற வேண்டுமானால், அதன் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும். இருப்பினும் கடந்த காலத்தில் நாட்டில் விரக்தியான சூழலை உருவாகும் வகையில் சிலர் வரலாற்றை எழுதினார்கள். ஆனால் இந்த பாரத பூமி விரக்தி நிலைக்க ஒரு பூமியாகும். இந்நூலைக் கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். எங்கள் வரலாறு கூட இதுவரை எங்களுக்குச் சரியாகத் தெரியாது

போர்
நமது வரலாற்றை உண்மையுடனும், நமது கண்ணோட்டத்துடனும் எழுத முயன்றால் அது தாமதமாகாது. இந்த போர் உடனடியாக முடிந்துவிடாது. ஆனால் நம் வரலாற்றை அனைவருக்கும் முன் வைப்பது அவசியம். ஹல்திகாட்டி போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தேவயூர் போர் வரலாற்றில் எங்கும் பேசப்படவில்லை. அனைத்து மக்கள் முன்னிலையிலும் உண்மையைக் கொண்டு செல்லும் பணியை நாம் செய்ய வேண்டும்.

இந்திய மன்னர்கள்
வரலாற்றாசிரியர்கள் முகலாயப் பேரரசைப் பற்றி மட்டுமே பேசினார்கள். ஆனால் பல இந்திய மன்னர்களின் புகழ்பெற்ற ஆட்சியைப் பற்றி போதுமான அளவு குறிப்பிடவில்லை. பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அஹோம் பேரரசு அஸ்ஸாமை சுமார் 650 ஆண்டுகள் சுதந்திரமாக வைத்திருந்தது. அஹோம்கள் கில்ஜி முதல் ஔரங்கசீப் வரை அனைவரையும் தோற்கடித்தனர். தென்னிந்தியாவின் பல்லவ வம்சம் சுமார் 600 ஆண்டுகள், சாளுக்கியர்கள் 600 ஆண்டுகள், மௌரிய வம்சம் ஆப்கானிஸ்தானில் இருந்து இலங்கை வரை சுமார் 550 ஆண்டுகள், சாதவாகனர்கள் 500 ஆண்டுகள் மற்றும் குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்" என்று தெரிவித்தார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications