மத்திய அரசின் ‛செக்’.. மாநில அரசுகள் தொலைக்காட்சி ஒளிபரப்ப அதிரடி தடை.. தமிழக அரசு கேபிள் நிலை?
டெல்லி: இந்தியாவில் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் சார்பில் தொலைக்காட்சி தொடங்கி ஒளிரப்பு செய்யவும், தொலைக்காட்சி சார்ந்த் சேவைகள் வழங்கவும் மத்திய அரசு அதிரடியாக தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் அரசு கேபிள், கல்வி தொலைக்காட்சி மத்திய அரசின் பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் செல்ல உள்ளது.
இந்தியாவில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் சார்பில் தகவல் தொடர்பு சார்ந்த உரிமங்களை வழங்கி வருகிறது. அதாவது தபால், தந்தி, தொலைபேசி, வயர்லெஸ், தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகளின் உரிமங்கள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் சுதந்திரமாக இயங்கும் பொதுத்துறை அமைப்பு தான் பிரசார் பாரதி. இது மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது.

மாநில அரசுகளுக்கு தடை
இந்நிலையில் தான் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நேற்று அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி மத்திய, மாநில, யூனியன் பிரதேசங்களில் உள்ள அரசுகளின் அமைச்சகங்கள், துறைகள் சார்பில் வரும் காலத்தில் தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி சார் சேவைகள் வழங்கக்கூடாது.

பிரசார் பாரதி வழியாக..
இதனை மத்திய பொதுத்துறை அமைப்பான பிரசார் பாரதி மட்டுமே மேற்கொள்ள உள்ளது. அதன்படி தொலைக்காட்சி சேவைகளில் அரசு, அரசு சார்ந்த துறைகளுக்கு என்று தனியாக சேனல்கள் இருப்பின் அதனை மத்திய ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதி கட்டுப்பாட்டுக்குள் எடுத்து இயங்க செய்யும். மாநில அரசுகள் சார்பில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களின் நிறுவனங்கள் 2023 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் அதனை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புரிந்துணர்வு ஒப்பந்தம்
இந்த அறிவிப்பின்படி மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசாங்கங்கள் அல்லது அதன் துறைகள் சார்பில் ஒளிபரப்பு செய்யப்படும் சேனல்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பிரசார் பாரதி கட்டுப்பாட்டில் எடுத்து கொள்ளப்பட உள்ளது. இதன்மூலம் மாநில அரசுகள் நடத்தும் சேனல்களின் அனைத்து கொள்கைகளும் பிரசார் பாரதியின் வரம்பிற்குள் கொண்டு வரப்பட்டு நிகழ்ச்சிகள் தடையின்றி ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தின் நிலவரம் என்ன?
இந்த அறிவிப்பால் தமிழகத்தை பொறுத்தமட்டில் தமிழ்நாடு அரசு கேபிள் மற்றும் கல்வி தொலைக்காட்சி ஆகியவை மத்திய அரசின் கீழ் போக வாய்ப்புள்ளது. இதேபோல் ஆந்திராவில் அரசின் ஐபிடிவியும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செல்ல உள்ளது. குறிப்பாக மாநில அரசுகள் சார்பில் தங்கள் மாநில மக்களுக்காகவும், மாணவர்களுக்காகவும் தனியாக தொலைக்காட்சிகளில் சேனல்கள் தொடங்கி ஒளிபரப்பி வருகின்றன. இந்த சேனலை மாநில அரசு கட்டுப்படுத்தி வந்த நிலையில் இது இனி மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு செல்வதை மாநில அரசுகள் விரும்பாது. இதனால் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில அரசுகள் எதிர்ப்புகள் தெரிவிக்க வாய்ப்புள்ளது.

பின்னணி காரணம் என்ன?
மத்திய அரசின் இந்த உத்தரவு என்பது திடீரென்று பிறப்பிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. அதாவது கடந்த 2012ல் மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் அதன் நிறுவனங்கள் தனியார் துறையுடன் சேர்ந்து தொலைக்காட்சி சேனல்கள் துவங்கி ஒளிபரப்பு செய்ய அனுமதி கூடாது என டிராய் எனும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கூறியது. இந்த பரிந்துரையின்படி பெங்கால் கிரிக்கெட் சங்கம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியது. இதன் தொடர்ச்சியாக தான் டிராய் பரிந்துரை, சட்டத்துறை அமைச்சகம் கூறிய கருத்துகளை பரிசீலித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications