டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள்.. 31 நாடுகளுக்கு பறக்கும் 149 விமானங்கள்.. உத்தேச பட்டியல்

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸால் உலகளாவிய பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்ட திட்டம் மே 16 முதல் மே 22 வரை நடைபெற உள்ளது. இதன்படி 149 விமானங்களில் 31 நாடுகளில் உள்ள இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட உள்ளார்கள். அந்த விமானங்களின் உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. வெறும் நான்கு மணி நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட லாக்டவுனையடுத்து இநதியாவிற்கு சர்வதேச விமான சேவைகள் உடனடியாக ரத்து செய்யப்பட்டன. இதேபோல் உள்நாட்டு விமான சேவைகளும் உடனடியாக ரத்து செய்யப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்று அச்சத்தால் அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர், சவுதி அரேபியா, ஐரோப்பிய நாடுகள், வளைகுடா நாடுகள் உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து பல லட்சம் இந்தியர்கள் நாடு திரும்ப தீவிரமாக ஆர்வம் காட்டிய அந்த சமயத்தில் லாக்டவுனால் அவர்கள் அங்கேயே சிக்கிக்கொண்டனர். அவர்களை மீண்டும் தாயகத்திற்கு திரும்ப அழைத்து வரும் பணிகள் மே 7ம்தேதி முதல் தொடங்கி உள்ளது.

குஜராத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பரவிய கொரோனா.. இனிதான் ரொம்ப கவனம் தேவை.. சிந்தனையில் அதிகாரிகள்குஜராத்திலிருந்து கர்நாடகத்திற்குப் பரவிய கொரோனா.. இனிதான் ரொம்ப கவனம் தேவை.. சிந்தனையில் அதிகாரிகள்

மே 16 முதல்

மே 16 முதல்

இந்நிலையில் பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வருவதற்காக வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்ட திட்டம் மே 16 முதல் மே 22 வரை நடைபெற உள்ளது. இதன்படி 149 விமானங்களில் 31 நாடுகளில் உள்ள இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட உள்ளார்கள். அந்த விமானங்களின் உத்தேச பட்டியல் விவரம் வெளியாகி உள்ளது.

இங்கிலாந்துக்கு 9

இங்கிலாந்துக்கு 9

இந்த முறை, அமெரிக்காவிற்கு 13, இங்கிலாந்துக்கு 9, கனடாவுக்கு 10, ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு 11, சவுதி அரேபியாவிற்கு 9, ரஷ்யாவிற்கு ஆறு மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு ஏழு விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக தெரிகிறது. . பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகள் மற்றும் பிற வளைகுடா நாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட உள்ளது.

நேபாளம்

நேபாளம்

இந்தியாவின் அண்டை நாடுகளான, வங்கதேசத்திற்கு ஒரு விமானமும், நேபாளத்திற்கு ஒரு விமானமும் இருக்கும் என்று தெரிகிறது. வந்தே பாரத் மிஷன் மிஷன் திட்டத்தின் கீழ் மே மாத மத்தியில் சுமார் 2 லட்சம் பேரை திரும்ப அழைத்து வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. ஜூன் மத்தியில், சுமார் 3.5-4 லட்சம் இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

 உத்தேச பட்டியல்

உத்தேச பட்டியல்

149 விமானங்கள் எந்தெந்த நாடுகளுக்கு இயக்கப்பட உள்ளன என்பதற்கான உத்தேச பட்டியல் வெளியாகி உள்ளது.இதில் அதிகப்படியான விமானங்கள் அமெரிக்காவிற்கு இயக்கப்படுகிறது. இந்தியாவில் இருந்து செல்லும் 149 விமானங்களில் 25க்கும் மேற்பட்ட விமானங்கள் கேரளாவில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளதாக தெரிகிறது. கர்நாடகாவில் இருந்து சுமார் 17 விமானங்கள் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் உத்தேசப்பட்டியலில் உள்ள 149 விமானங்களில் ஒன்று கூட தமிழகத்தில் இருந்து செல்வதாக லிஸ்டில் இல்லை.

English summary
The second phase of Vande Bharat Mission : 149 flights, including feeder flights, will be deployed to bring back people from 31 countries
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X