டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் நாளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டம்- பிரதமர் மோடி பங்கேற்பு இல்லை!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த கூட்டத்துக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமை வகிக்கிறார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. 2017-ம் ஆண்டுக்குப் பின் இந்தியா தலைமையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 19-வது கூட்டம் நாளை டெல்லியில் இணையவழியில் நடைபெற உள்ளது.

Vice President Venkaiah Naidu To Chair SCO Summit On Nov 30

இந்த மாநாட்டில் ரஷ்யா, சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் பிரதமர்கள் இணையவழியில் பங்கேற்கின்றனர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இந்த கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்திருக்கிறார்.

பாகிஸ்தானின் வெளிவிவகாரங்களுக்கான நாடாளுமன்ற செயலாளர் இந்த கூட்டத்தில் பங்கேற்கிறார். பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பிரதமர் மோடி தமது வாரணாசி தொகுதி நிகழ்ச்சிகளில் நாளை பங்கேற்க உள்ளார்.

 இரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா! இரு நாட்டு உறவை பதம் பார்த்த 2020.. தாறுமாறாக வென்ற இந்தியாவின் ராஜாங்க வலிமை.. ஏமாற்றமடைந்த சீனா!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளிடையே இந்த கூட்டம் நல்லுறவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய கூட்டத்தின் முடிவில் 8 நாடுகளின் சார்பாக கூட்டறிக்கை வெளியிடப்படும்.

English summary
Vice President Venkaiah Naidu will Chair 19th meeting of SCO Council of Heads of Government to be hosted by India in virtual format on Nov 30.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X