டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசின் ஐடி விதிகளை பின்பற்ற.. எல்லா முயற்சிகளையும் செய்து வருகிறோம்.. இறங்கி வரும் டிவிட்டர்!

Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் சமூக வலைத்தளங்களையும், ஓடிடி தளங்களையும் கட்டுப்படுத்த மத்திய அரசு நீண்ட காலமாக முயன்று வருகிறது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய தகவல் தொழில்நுட்ப துறை மூலம் சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் புதிய விதிகள் கொண்டு வரப்பட்டன.

15 நிமிடம்.. தரையிறங்கும் முன் திடீரென மோசமாக குலுங்கிய.. விஸ்தாரா விமானம்.. 3 பயணிகள் படுகாயம்! 15 நிமிடம்.. தரையிறங்கும் முன் திடீரென மோசமாக குலுங்கிய.. விஸ்தாரா விமானம்.. 3 பயணிகள் படுகாயம்!

அதன்படி இந்த சமூக வலைத்தளம் மற்றும் ஓடிடி தளங்கள் தங்களிடம் வரும் புகார்களை விசாரிப்பதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும். அரசு வைக்கும் புகார்களை இந்த அதிகாரிதான் விசாரிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்ற கடந்த மாதம் வரை அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. பேஸ்புக், கூகுள் இதை பின்பற்றுவதாக அறிவித்தது.

டிவிட்டர்

டிவிட்டர்

இந்த நிலையில் டிவிட்டர் நிறுவனம் மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றாமல் காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மத்திய அரசுக்கும், டிவிட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மோதல் வந்தது. ஏற்கனவே டூல் கிட் விவகாரத்திலும், பாஜக தலைவர்கள் டிவிட்டில் manipulative tag போட்ட விவகாரத்திலும் கடும் மோதல் நிலவி வந்தது.

ஐடி விதி

ஐடி விதி

இந்த நிலையில் ஐடி விதிகளை பின்பற்றாமல் இருந்தது இன்னும் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்து இருந்தது. டிவிட்டர் நிறுவனத்திற்கு வழங்கும் லீகல் பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் முடிவில் மத்திய அரசு இப்படி எச்சரிக்கை விடுத்து இருந்தது.

மோதல்

மோதல்

இந்த மோதல் முற்றவே ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் ப்ளூ டிக் நீக்கப்பட்டது. இது பெரிய சர்ச்சையான நிலையில்தான் தற்போது மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்ற எல்லா முயற்சிகளையும் செய்து வருவதாக டிவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விளக்கத்தை இந்திய அரசிடம் கொடுத்து இருக்கிறோம்.

முயற்சி

முயற்சி

விதிகளை பின்பற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்று டிவிட்டர் கூறியுள்ளது. இதில் மத்திய அரசிடம் டிவிட்டர் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவிற்கான அதிகாரியை நியமிக்க வேண்டும் என்ற விதி உள்ளதால் இது தொடர்பாக ஆலோசித்து வருவதாக டிவிட்டர் மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.

English summary
We are making every effort to comply with the new IT Rules says Twitter as Union government plan to take action against social media giant.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X