டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பயப்படுறீங்களா.. ஆர்எஸ்எஸ் பக்கம் ஓடிப் போங்க.. காங்கிரசுக்கு தேவையில்லை.. ராகுல் காந்தி ஆவேசம்

Google Oneindia Tamil News

டெல்லி: பயப்படுபவர்கள் யாரும் காங்கிரசில் இருக்கத் தேவையில்லை , ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கி ஓடி விடுங்கள் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தெரிவித்து இருக்கிறார்.

உத்திரபிரதேசம், குஜராத் போன்ற பெரிய மாநிலங்களில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. பஞ்சாப்பும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது.

இந்த மாநிலங்கள் அனைத்துமே காங்கிரஸ் கட்சியை உயிர்ப்போடு, தனித்த செல்வாக்குடன் இருக்கக் கூடிய மாநிலங்கள்.

எது.. நான் ராஜினாமா செய்யப்போறேனா? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல.. முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்எது.. நான் ராஜினாமா செய்யப்போறேனா? அதுக்கு எல்லாம் வாய்ப்பே இல்ல.. முதல்வர் எடியூரப்பா திட்டவட்டம்

ராகுல் காந்தி ஆலோசனை

ராகுல் காந்தி ஆலோசனை

ஆனால் பாஜக போல இன்னும் காங்கிரஸ் முழுவீச்சில் தேர்தலுக்கு தயார் ஆகவில்லை. இந்த நிலையில்தான் கட்சி தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார் ராகுல் காந்தி. அப்போது வழக்கத்தை விட ஆவேசம் அதிகமாகத் தென்பட்டது.

பயம் கூடாது

பயம் கூடாது

இதோ ராகுல்காந்தி பேச்சிலிருந்து: காங்கிரஸ் கட்சிக்குத் தேவை அச்சம் இல்லாத மக்கள். அச்சம் இல்லாத தொண்டர்கள். இதுதான் நமது கொள்கை . இதுதான் எனது இந்த ஆலோசனை கூட்டத்தின் அடிப்படை மெஸேஜ்.

கட்சியினருக்கு வார்னிங்

கட்சியினருக்கு வார்னிங்

பயப்படாத நிறைய பேர் காங்கிரஸ் கட்சிக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களை காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டுவர வேண்டும். நமது கட்சிக்குள் இருந்து கொண்டு பயப்பட்டு கொண்டே இருப்பவர்கள் வெளியேற்றப்படுவார்கள். தயவுசெய்து காங்கிரஸ் கட்சியிலிருந்து நீங்கள் விலகி விடுங்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பில் சென்று சேர்ந்து கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் தேவை கிடையாது. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

கட்சிக்குள் அதிருப்தி

கட்சிக்குள் அதிருப்தி

காங்கிரஸ் கட்சியில் உள்ள மூத்த நிர்வாகிகள் பலரும் தலைமை மீது அதிருப்தி கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கக் கூடிய நிலையில் ராகுல்காந்தி இவ்வாறு பேசியிருக்கிறார். ஏற்கனவே மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்திக்கு நெருக்கமாக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பிறகு பாஜகவில் இணைந்து கொண்டார். தற்போது மத்திய அமைச்சராகி உள்ளார். இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டு ராகுல்காந்தி ஆவேசமாக இப்படி தெரிவித்ததாக கூறப்படுகிறது .

பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

பிரசாந்த் கிஷோர் சந்திப்பு

சமீபத்தில், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரை அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அப்போது காங்கிரஸ் கட்சியை வளர்த்து எடுப்பதற்கு சில திட்டங்களை அவர் முன் வைத்திருக்க கூடும் என்று தெரிகிறது. இந்த நிலையில் தான் ராகுல் காந்தி தனது பேச்சின்போது அதிரடி காண்பித்துள்ளார்.

English summary
Rahul Gandhi on Friday said the Congress needs fearless leaders and those in the party who are afraid should be thrown out, in a pep talk to the party's social media team that ended up as a scorching message to defectors and dissidents.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X