Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

28 அடி உயரம்.. 65 டன் எடை.. டெல்லியில் பிரதமர் மோடி திறந்த நேதாஜி சிலையின் சிறப்பம்சங்கள் இதுதான்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் புதிதாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த சிலை 28 அடி உயரத்தில் 65 மெட்ரிக் டன் எடையில் 2 மாதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் வெளியாகி உள்ளன.

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம், பிரதமருக்கான புதிய இல்லம் உள்பட பல்வேறு பணிகள் ரூ. 20,000 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா காலம், நீதிமன்ற வழக்குகளை கடந்து இந்த திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

கொரோனா காலத்தில் பொருளாதார பிரச்சனையில் இந்த திட்டத்தில் செலவு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. இருப்பினும் அத்தியாவசிய பணி, அதனால் பணிகள் தொடர்ந்து நடக்கலாம் என்று டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பணிகள் சுறுசுறுப்படைந்தது.

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பு

பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பு

இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கட்டிடம், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தின் மேல் அமைக்கப்பட்டு இருக்கும் இந்திய தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக தான் இன்று இந்த திட்டத்தின் கீழ் மறுசீரமைக்கப்பட்ட டெல்லியில் உள்ள ராஜபாதை எனப்படும் கர்தவ்யா பாத் மற்றும் சென்ட்ரல் விஸ்டா ஆகியவற்றை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை திறப்பு

அதன்படி நாடாளுமன்றத்திற்கு செல்லும் சாலைகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய நுழைவு வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. இந்தியா கேட்டில் இருந்து நாடாளுமன்றம் வரை உள்ள நீண்ட சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மொத்தம் 700 ஏக்கர் பரப்பிற்கு இங்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன. விளக்குகள், நீர் நிலைகள், புதிய வகை செடிகள், சிவப்பு கிரானைட் கற்கள், 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு பக்கமும் செல்லும் சாலைகள், 16 புதிய பாலங்கள் இந்த பாதையில் அமைக்கப்பட்டு உள்ளன. இதைத்தான் இன்று பிரதமர் மோடி திறந்து வைத்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியா கேட் அருகே புதிதாக அமைக்கப்பட்டு இருக்கும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலையையும் இன்று திறந்து வைத்தார்.

 28 அடி உயரத்தில் நேதாஜி சிலை

28 அடி உயரத்தில் நேதாஜி சிலை


இந்நிலையில் தான் சுபாஷ் சந்திரபோஸின் சிலை பற்றிய பல்வேறு அம்சங்கள் வெளியாகி உள்ளன. அதன்படி புதிதாக திறக்கப்பட்டுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை 65 மெட்ரிக் டன் எடையில் 28 அடி உயரம் கொண்டதாகும். இது மத்திய அரசின் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் ஒரு பகுதியாக நிறுவப்பட்டுள்ளது.

ஒற்றைக்கல்லில் சிலை செதுக்கம்

ஒற்றைக்கல்லில் சிலை செதுக்கம்

இந்த சிலையானது 280 மெட்ரிக் டன் எடை கொண்ட கிரானைட் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. இந்த கல் தெலுங்கானா தெலங்கானா கம்மம் நகரிலிருந்து 100 அடி நீளம் கொண்ட கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்து. இந்த கிரானைட் கல் டெல்லிக்கு 1665 கிலோமீட்டர் தொலைவை கடந்து டெல்லிக்கு கொண்டு வரப்பட்டது. இதற்காக 140 சக்கரங்கள் கொண்ட டிரக் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு வெறும் 2 மாத கடின உழைப்புக்கு பின் 68 மெட்ரிக் டன் எடையில் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலை முற்றிலும் கைகளால் செதுக்கப்பட்டவை. சிற்பி அருண் யோகிராஜ் தலைமையிலான குழுவினர் இந்த சிலையைச் செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+