அறிவியல் முனைப்பிற்கும், இந்திக்கும் என்ன தொடர்பு?..மத்திய அமைச்சருக்கு, சு.வெங்கடேசன் எம்.பி கேள்வி
டெல்லி: திறனறித் தேர்வுக்கு இந்தி, ஆங்கில மொழிகளில் மட்டுமே கேள்வித்தாள் அமைப்பதற்கு மதுரைஎம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அறிவியல் முனைப்பிற்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? என்று மத்திய அமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக சு.வெங்கடேசன் எம்.பி மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு (தனிப் பொறுப்பு) எழுதியுள்ள கடிதத்தின் விவரம் பின்வருமாறு:

நல்ல திட்டம்
கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா (KVPY) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. +1 , +2 மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்பட்டு உதவித் தொகைக்கு தகுதி உள்ளவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆண்டிற்கு உதவித்தொகை மற்றும் கொடையாக ரூ 80,000 இல் இருந்து ரூ 1,12,000 வழங்கப்படும். இது போன்ற அறிவியல் முனைப்பை மாணவர்கள் மத்தியில் வளர்க்கிற திட்டங்கள் நல்லதுதான்.

தமிழில் ஏன் தேர்வு இல்லை?
ஆனால் தேர்வு முறை எல்லோருக்கும் நீதி தருவதாக, வாய்ப்பு வழங்குவதாக, தேர்வு எழுதுகிற சூழல் பொருந்தி வருவதாக இருக்கிறதா என்பதே கேள்வி.மத்திய அரசுக்கு மூன்று கேள்விகள்: ஒன்று, திறனறித் தேர்வு இரண்டு மொழிகளில் வினாத்தாள் கொண்டதாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மட்டுமே. மாநில மொழிகளில் +1, +2 கல்வி பயிலும் மாணவர்கள் என்ன செய்வார்கள்? இந்தியில் எழுதலாம். ஆனால் தமிழில் எழுத முடியாது என்றால் அது சமதள ஆடுகளத்தை எப்படி உறுதி செய்யும்? அறிவியல் முனைப்பிற்கும் மொழிக்கும் என்ன சம்பந்தம்? அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கு என்ன சம்பந்தம்? தேர்வுக்கு முன்பே கதவை அடைக்கிற பாரபட்சம் இல்லையா?

தேர்வு மையங்கள் குறைவு
தமிழ் வழி மாணவர்கள் தடை தாண்டும் ஒட்டமும், இந்தி தெரிந்த மாணவர்கள் அதே ஓடு பாதையில் தடையில்லாமல் ஓட்டமும் என்றால் என்ன போட்டி அது? ஆகவே மாநில மொழிகளிலும் தேர்வை நடத்துங்கள் என்பது முதல் கோரிக்கை. நவம்பர் 7 அன்றுதான் தேர்வு என்பதால் கால அவகாசம் இருக்கிறது. அரசு மாநில மொழிகளிலும் வினாத் தாள்களுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். எல்லோருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும்.இரண்டாவது, தேர்வுக்கான சூழல். தமிழ்நாட்டில் 9 தேர்வு மையங்கள். பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் 13 மையங்கள். தமிழ்நாடு ஒப்பீட்டளவில் பெரிய மாநிலம்.

விண்ணப்ப கட்டணம் அதிகம்
ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள 9 மையங்களோடு இன்னும் 4 மையங்களாவது குறைந்த பட்சம் அறிவிக்கலாம். கோவிட் சூழலில் அதிக மையங்கள் தேவை. மூன்றாவது, விண்ணப்ப கட்டணம். பொதுப் பிரிவினருக்கு ரூ 1250, எஸ்.சி எஸ்.டி மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ 625. இக் கட்டணத்தை தாங்க முடியாதவர்கள் அறிவியல் முனைப்பு கொண்டவர்கள் ஆயினும் தேர்வு எழுதக் கூட முடியாது. வெளியூர் போய் தேர்வு எழுதுபவர்கள் தங்குமிடம், உடன் வருவோர் செலவுகள், உணவுச் செலவு, போக்குவரத்து கட்டணம் ஆகியனவற்றையும் தாங்க வேண்டுமே! ஆகவே விண்ணப்ப கட்டணம் குறைக்கப்பட வேண்டும். செப்டம்பர் 6 விண்ணப்ப கடைசி தேதி என்பதால் அரசு விரைந்து தீர்வு காண வேண்டும். அமைச்சரின் நல்ல பதிலை எதிர்பார்ப்போம். இவ்வாறு அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications