டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெளிநாட்டில் இருந்து வந்த பொருட்கள் எங்கே? பதில் சொல்லுங்க மோடி ஜி.. ராகுல் காந்தி கேள்வி!

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவுக்கு வெளிநாடுகளில் இருந்து என்னென்ன உதவிகள் வந்துள்ளது? என்பது குறித்து மத்திய அரசிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது.

ஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்ஆக்சிஜன் சப்ளை: மும்பையை பார்த்து கத்துக்கோங்க.. மத்திய அரசு, டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் அட்வைஸ்

மோசமான நிலையில் இந்தியா

மோசமான நிலையில் இந்தியா

இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று நிலைமை மேலும், மேலும் மோசமாகி வருகிறது. கொரோனா உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கின்றன. இந்தியாவின் பரிதாபமான நிலையை கண்டு உலக நாடுகள் போட்டி, போட்டு உதவி செய்து வருகின்றன.

உதவும் உலக நாடுகள்

உதவும் உலக நாடுகள்

அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, கனடா, பிரான்ஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என பல்வேறு உலக நாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. லென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவற்றை விமானம் மூலம் இந்தியாவுக்கு தொடர்ந்து அனுப்பி வைத்து வருகின்றன.

வெளிப்படைத்தன்மை இல்லை

வெளிப்படைத்தன்மை இல்லை

ஆனால் இவ்வாறு இந்தியா வரும் பொருட்கள் முறையாக மருத்துவமனைகளுக்கு சென்று சேர்வதில்லை என்று குற்றம்சாட்டப்படுகிறது. இதுவரை இந்தியாவுக்கு எந்தெந்த நாடுகள் உதவி செய்துள்ளன? என்னென்ன உதவிகள் வந்துள்ளன? என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியும் இதே குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

ராகுல் கேள்வி

ராகுல் கேள்வி

இது தொடர்பாக ராகுல்காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது :- கொரோனாவுக்கு வெளிநாட்டு உதவி பற்றிய கேள்விகள்:
-இந்தியாவுக்கு வெளிநாடுகளில் இருந்து என்னென்ன பொருட்கள் கிடைத்துள்ளன?
- அந்த பொருட்கள் எங்கே?
- இவற்றின் மூலம் யார் பயனடைகிறார்கள்?
- வெளிநாடுகளில் இருந்து வரும் பொருட்கள் மாநிலங்களுக்கு எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன?
- இவற்றினை பகிர்ந்தளிப்பதில் ஏன் வெளிப்படைத்தன்மை இல்லை?
இதற்கு மத்திய அரசிடம் ஏதேனும் பதில்கள் இருக்கிறதா? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

English summary
What foreign aid has Corona received? Rahul Gandhi has questioned the central government about
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X