டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரதமர் மோடி வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா? நாளை என்ன சொல்ல போகிறாரோ.. சு.சாமி கேள்வி

Google Oneindia Tamil News

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி 2017 சுதந்திர தின உரையில் கூறியதை நிறைவேற்றினாரா? என பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியுள்ள பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி, நாளைய சுதந்திர தின உரையில் அவர் என்ன சொல்ல போகிறாரோ? என கிண்டலாக கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. 75வது சுதந்திர தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்தும் திட்டம் உள்ளிட்ட சில திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

இது அவமானம்! தேசப்பற்றுடன் தொடர்பில்லாத பாஜக! தேசியக்கொடியில் காசு பார்க்கும் மோடி!சாடிய ஜோதிமணிஇது அவமானம்! தேசப்பற்றுடன் தொடர்பில்லாத பாஜக! தேசியக்கொடியில் காசு பார்க்கும் மோடி!சாடிய ஜோதிமணி

சுதந்திர தின கொண்டாட்டம்

சுதந்திர தின கொண்டாட்டம்

இந்நிலையில் சுதந்தி தினத்தையொட்டி இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்ற உள்ளார். நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்த உள்ளார். இதில் மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என ஏராளமானவர்கள் பங்கேற்க உள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக கொண்டாடப்பட உள்ளன.

நாளை பிரதமர் மோடி உரை

நாளை பிரதமர் மோடி உரை

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றும் பிரதமர்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவர். அதன்படி நாளை பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். இந்த உரையில் இந்தியாவின் சாதனையை பற்றி பேசுவார். இந்நிலையில் தான் மக்களுக்கான புதிய திட்டம் ஏதாவது ஒன்றை அவர் அறிவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சுப்பிரமணியசாமி கேள்வி

சுப்பிரமணியசாமி கேள்வி

இந்நிலையில் தான் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‛‛2017ம் ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி 2022 ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பின்வரும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என கூறினார். ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும், அனைவருக்கும் வீடு, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப்படும், புல்லட் ரயில் திட்டம் ஆகியவற்றை கூறினார். இதுவெல்லாம் நடந்ததா?. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ல் அவர் தனது உரையில் என்ன வாக்குறுதி அளிக்கப் போகிறார்?'' என கேள்வி எழுப்பியுள்ளார்.

காரணம் என்ன?

காரணம் என்ன?

இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி 2017 ம் ஆண்டில் சுதந்திர தின உரையில் கூறியதை நிறைவேற்றாத நிலையில் நாளை புதிதாக எந்த வாக்குறுதியை அளிக்க போகிறாரோ? எனும் வகையில் சுப்பிரமணியசாமி இந்த பதிவை செய்துள்ளார். சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை சுப்பிரமணியசாமி தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார். இதன் தொடர்ச்சியாக தான் அவர் தற்போதும் பிரதமர் மோடியை விமர்சனம் செய்துள்ளார்.

English summary
Independence Day speech in 2017 PM Modi made the following promises to be achieved by 15th August of 2022, 2 crore new jobs every year, housing for all, doubling farmers income and bullet train scheme Has it happened? What is he going to promise this 15th August speech this year?.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X