மத்திய அரசு கூறும் மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? பாதுகாப்பானதா? டவுன்லோட் செய்வது எப்படி? முழு தகவல்
டெல்லி: மத்திய அரசு ஆதார் குறித்து முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில், மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன அதை எப்படிப் பயன்படுத்துவதை என்பதைப் பார்க்கலாம்.
மத்திய அரசு நேற்றைய தினம் ஆதார் தொடர்பாகச் சுற்றறிக்கை ஒன்றை அளித்திருந்தது. அதாவது ஆதார் புகைப்பட நகலைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் அதைப் பகிரும் முன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று கூறி இருந்தது.
மேலும், மோசடிகளில் இருந்து பாதுகாக்க 'மாஸ்க்டு ஆதாரை'(Masked Aadhaar) பயன்படுத்துமாறும் அதில் மத்திய அரசு வலியுறுத்தி இருந்தது. இருப்பினும், இந்த அறிக்கை தவறாகப் புரிந்து கொள்ளும் ஆபத்து இருப்பதாகக் கூறி இந்த அறிக்கையைத் திரும்பப் பெற்றது.

மாஸ்க்டு ஆதார்
இருப்பினும், பாதுகாப்பு கருதி மாஸ்க்டு ஆதாரையே பயன்படுத்துமாறு வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர். இந்த மாஸ்க்டு ஆதார் என்றால் என்ன? அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பது குறித்துப் பார்க்கலாம். மாஸ்க்டு ஆதார் என்பது என்பது ஆதார் அட்டையின் சிறப்புப் பதிப்பாகும். ஆதார் அட்டை தவறாக மோசடி பயன்பாட்டிற்காகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில் UIDAI சார்பில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.

4 எண்கள் மட்டுமே தெரியும்
மொத்தம் இருக்கும் 12 இலக்கு எண்களில் கடைசி 4 எண்கள் மட்டுமே அனைவராலும் பார்க்க முடியும். மாஸ்க்டு ஆதாரில் முதல் 8 எண்கள் மறைக்கப்பட்டு, 'XXXX-XXXX'என்றே இருக்கும். இதில் ஆதார் எண்ணின் கடைசி 4 நம்பர்கள் மட்டுமே தெரியும் என்பதால், பொதுமக்களின் இதர தனிப்பட்ட விவகாரங்கள் மோசடி ஆசாமிகளிடம் இருந்து பாதுகாக்கப்படும்.

எங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்
ஆதார் என்பது 12-டிஜிட்டல் அடையாள எண்ணாகும். இது இந்திய குடியுரிமையாளருக்கு UIDAI மூலம் வழங்கப்படுகிறது. மாஸ்க்டு ஆதார் என்பது அதே அட்டைதான் ஆனால் கார்டில் உள்ள முதல் எட்டு எண்களை மறைக்கப்பட்டு கடைசி நான்கு எண்களை மட்டும் தெரியும். இது கூடுதல் பாதுகாப்பைத் தரும். மாஸ்க்டு ஆதாரை அதிகாரப்பூர்வ UIDAI போர்ட்டலில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

டவுன்லோட் செய்வது எப்படி?
மாஸ்க்டு ஆதாரை டவுன்லோட் செய்ய யுஐடிஏஐ அதிகாரப்பூர்வ இணையதளமான https://myaadhaar.uidai.gov.in/ க்கு செல்லவும்.
அதில் லாக்இன் செய்து, ஆதார் எண்ணைப் போட்டு, ஒடிபி பெறவும்
ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒடிபி அனுப்பப்படும்.. OTP மூலம் லாகின் செய்யவும்.
அதில் services sectionக்கு சென்று 'Download Aadhaar'ஐ கிளிக் செய்யவும்
-ரிவ்யூ செக்ஷனுக்கு சென்று, Do want a masked Aadhaar'? என்ற ஆப்ஷனில் ஆமாம் என்பதை கிளிக் செய்யவும்
-அதன் பிறகு டவுன்லோட் செய்யப்படும் ஆதார் அட்டை மாஸ்க்டு ஆதராகவே இருக்கும்.

மாஸ்க்டு ஆதார் அவசியமா
மோசடி மற்றும் தனிப்பட்ட தகவல்கள் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க மாஸ்க்டு ஆதார் அவசியம் ஆகிறது. மத்திய அரசு சமீபத்தில் அறிக்கையிலும் கூட, ஆதார் அட்டையை நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்தும் ஆபத்து இருப்பதால் மாஸ்க்டு ஆதாரை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களிலும் இப்போது ஆதார் அட்டை கேட்கப்படும் நிலையில், மத்திய அரசின் இந்த எச்சரிக்கை முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications