ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லையென்றால், தமிழ்நாடும்தான் இல்லை..பாஜக தேசிய நிர்வாகி காட்டம்
டெல்லி: ராஜ ராஜ சோழன் இந்துவா? என்ற விவகாரம் எழுந்துள்ள நிலையில், பாஜக தேசிய அமைப்பு செயலாளர் பிஎல் சந்தோஷ், 'அப்போது தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது. பிறகு எப்படி ராஜ ராஜ சோழன் திராவிட மன்னராக இருக்க முடியும்?' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த படம் வெளியாவதற்கு முன்பே பெரும் எதிர்பார்ப்பை கொடுத்து இருந்தது. வெளியான பிறகு படம் குறித்த விவாதங்களுக்கு சற்றும் பஞ்சம் இல்லாமல் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. அரசியல் களத்திலும் விவாதப்பொருளாக இந்த படம் மாறியிருக்கிறது.

ராஜராஜ சோழன் இந்து அரசன்
இதற்கு காரணம், அண்மையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றி மாறன் பேசியது தான். அவர், ''சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாகச் சென்றடையும் கலைவடிவம். அதைச் சரியாகக் கையாளவில்லை என்றால் நமது அடையாளங்கள் பறிக்கப்படும். வள்ளுவருக்குக் காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படித் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது'' என்று கூறியிருந்தார்.

பாஜக எதிர்ப்பு
வெற்றி மாறனின் இந்த கருத்து பெரும் விவாததை ஏற்படுத்தியிருந்த நிலையில், வெற்றிமாறனின் கருத்துக்கு ஆதரவாக நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் கருத்து தெரிவித்தார். கமல்ஹாசன் கூறுகையில், ''அப்போது வைணவம், சிவம் மற்றும் சமணம் தான் இருந்தது.. இதையெல்லாம் எப்படிச் சொல்வது என்று தெரியாமல் ஆங்கிலேயர்கள்தான் இந்து என்று அழைக்கத் தொடங்கினர்'' என்றார். இந்த கருத்துக்கு தமிழக பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பிரகதீஸ்வரர் கோவிலை கட்டியவர்
பாஜகவினரும் வலதுசாரி சிந்தனையாளர்கள் சிலரும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக இந்த விவகாரம் குறித்து பாஜகவின் தேசிய நிர்வாகிகள் கூட கருத்து தெரிவிக்கும் அளவுக்கு மாறிவிட்டது. அந்த வகையில், பாஜகவின் தேசிய அமைப்பு செயலாளரான பிஎல் சந்தோஷ் இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து பிஎல் சந்தோஷ் கூறுகையில், ''தமிழகத்தில் பிரகதீஸ்வரர் என்ற கோவிலை கட்டியவர் ராஜ ராஜ சோழன். இவர் இந்துவா? என்ற விவாதத்தை முட்டாள்கள் தொடங்கியிருக்கின்றனர்.

திராவிட மன்னராக இருக்க முடியும்?
அப்போது தமிழ்நாடு என்ற ஒன்றே கிடையாது. அப்போது சோழ சாம்ராஜ்யம், பல்லவ சாம்ராஜ்யம், பாண்டிய சாம்ராஜ்ய மன்னர்கள்தான் ஆட்சி செய்தனர். பிறகு எப்படி ராஜ ராஜ சோழன் திராவிட மன்னராக இருக்க முடியும்? 'திராவிடம்' என்பது சுயநல அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தப்படும் விவகாரம். ஊழலும் நியாயமற்ற முறையில் நடந்து கொள்வதுமே திராவிடம்'' என்று கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். முன்னதாக ஹெச்.ராஜா தனது ட்விட்டரில், ''சிவன் கோவில் கட்டிய மாமன்னன் என்ன இஸ்லாமியரா அல்லது கிறித்தவரா, பௌத்தரா என்பதை அந்த தற்குறி சொல்லட்டும்'' என்று கடுமையாக சாடியிருந்தார்.
-
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications