3 ஆண்டுகளாக மம்தாவுடன் விடாத மோதல்.. ஆளுநர் டூ துணை ஜனாதிபதி.. யார் இந்த ஜெகதீப் தன்கர்?
டெல்லி: மேற்கு வங்க ஆளுநராக இருந்து குடியரசுத் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜெகதீப் தன்கர். யார் இவர்?
Recommended Video
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் இந்த மாதம் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ஜெகதீப் தன்கர் போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் சார்பில் மார்க்ரெட் ஆல்வா களம் கண்டார். இதையடுத்து புதிய குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கையும் இன்றே அறிவிக்கப்பட்டது.

பாஜக கூட்டணி
அதில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெகதீஷ் தன்கர் வெற்றி பெற்றார். மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியுடன் மல்லுக்கட்டிய ஜெகதீஷ் தன்கர் யார் இவர்? கடந்த 1951 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிதானா பகுதியில் பிறந்தவர் ஜெகதீப் தன்கர். அவருக்கு 71 வயதாகிறது.

சட்லஜ் ஆற்று பிரச்சினை வழக்கு
வழக்கறிஞர் ஆவார்.இவர் ராஜஸ்தான் பார் கவுன்சிலில் 1979 இல் பதிவு செய்துள்ளார். 1990 ஆம் ஆண்டு முதல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞராக பணிபுரிந்த இவர் இந்தியாவின் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் வாதிட்டுள்ளார். சட்லஜ் ஆற்று பிரச்சினை தொடர்பாக கடந்த 2016ஆம் ஆண்டு ஹரியானா மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டார்.

பாஜகவில் ஐக்கியம்
இவர் பாஜகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். இதையடுத்து 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக ஜுன்ஜுஹுனு லோக்சபாவுக்கு போட்டியிட்டு தேர்வானார். அப்போது பிரதமராக இருந்த சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் அவருக்கு மத்திய இணையமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இரு ஆண்டுகள் மட்டுமே அமைச்சர் பதவி
ஆயினும் இரு ஆண்டுகள் வரை மட்டும் அமைச்சராக இருந்தார். பின்னர் 1993 ஆம் ஆண்டு நடந்த ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வென்றார். இந்த 5 ஆண்டுகள் பதவி காலத்தை முழுமையாக முடித்த இவர் கடந்த 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில ஆளுநர் ஜெகதீப் தன்கரை நியமித்து அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.

ஆளுநர்
ஆளுநர் பதவியில் இருந்த ஜெகதீப்புக்கும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனம் தொடர்பாக இருவருக்கும் பனிப்போர் நீடித்தது. ஆளுநர் ஜெகதீப் தன்கரை திரும்ப பெறக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு மம்தா பானர்ஜி கடிதமும் எழுதியிருந்தார்.

பரபரத்த மேற்கு வங்கம்
மேலும் ஆளுநர் தன்கர் ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து தொலைபேசி அழைப்புகளை ஒட்டுக் கேட்பதாகவும் மம்தா குற்றம்சாட்டியிருந்தார். இவ்வாறு பல்வேறு பனிப்போர் நிலவி வந்த நிலையில் ஜெகதீப் தன்கரை பாஜக அரசு குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக அறிவித்திருந்தது. இதையடுத்து கடந்த ஜூலை 17 ஆம் தேதி ஆளுநர் பதவியை தன்கர் ராஜினாமா செய்தார். தற்போது ஆளுநர் பதவியிலிருந்து துணை குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications