டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"யமுனையில் வீசிவிடுவார்".. அதிர்ந்த சோனியா.. சீண்டிய கபில் சிபல்.. காங்.கிலிருந்து விலகியது ஏன்?

Google Oneindia Tamil News

டெல்லி: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக கபில் சிபல் அறிவித்துள்ளார். கடந்த மே 16ம் தேதியே காங்கிரசில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

அதோடு ராஜ்ய சபா தேர்தலுக்கு சுயேச்சை வேட்பாளராக இவர் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவோடு போட்டியிடுகிறார். தற்போது காங்கிரஸ் சார்பாக இவர்.. சமாஜ்வாதி கூட்டணி ஆதரவுடன் எம்பியாக உள்ளார். ஜூலை மாதம் இவரின் பதவி முடிவிற்கு வருகிறது.

இப்போது உத்தர பிரதேசத்தில் இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏக்களே உள்ளதால் மீண்டும் கபில் சிபல் காங்கிரசில் எம்பியாக முடியாது. இந்த நிலையில் காங்கிரசில் இருந்து வெளியேறி, சுயேட்சையாக, சமாஜ்வாதி ஆதரவுடன் கபில் சிபல் எம்பி ஆகிறார்.

 காங்.-ல் இருந்து கபில் சிபல் திடீர் விலகல்- அகிலேஷ் ஆதரவுடன் ராஜ்யசபா வேட்பாளராக வேட்புமனு தாக்கல் காங்.-ல் இருந்து கபில் சிபல் திடீர் விலகல்- அகிலேஷ் ஆதரவுடன் ராஜ்யசபா வேட்பாளராக வேட்புமனு தாக்கல்

சமாஜ்வாதி ஆதரவு

சமாஜ்வாதி ஆதரவு

நான் காங்கிரசை விமர்சனம் செய்ய மாட்டேன். எனக்கு இன்னும் அக்கட்சியில் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் அரசியல் கடந்து பணியாற்ற விரும்புகிறேன். அதற்கு நான் சுயேட்சையாக இருப்பதே சரியாக இருக்கும். நான் இனி காங்கிரஸ் உறுப்பினர் கிடையாது. சமாஜ்வாதி ஆதரவிற்கு நன்றி என்று கபில் கபில் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். இவரின் ராஜினாமாவிற்கு பின் எம்பி பதவியை தாண்டி வேறு சில காரணங்களும் உள்ளன.

 சுயேச்சை எம்பி

சுயேச்சை எம்பி

கடந்த 2020 மார்ச் மாதமே சோனியா, ராகுல் vs கபில் சிபல் இடையிலான மோதல் தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும். 2020 மார்ச் மாதம் இந்த மோதலுக்கு முதல் விதை போடப்பட்டு உள்ளது. அப்போது காங்கிரசில் இருந்த ஜோதிராதித்ய சிந்தியா பாஜகவிற்கு தாவி மத்திய பிரதேசத்தில் கமல் நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ காரணமாக இருந்தார். இதன் பின்புதான் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சுதாரித்துக் கொண்டே ஒன்றாக கூடி ஆலோசனை செய்துள்ளனர்.

ஜி 23 மாநாடு

ஜி 23 மாநாடு

23 தலைவர்கள் ஒன்றாக கூட சோனியா, ராகுல் காந்திக்கு எதிராக ஆலோசனைகளை செய்தனர். இந்த கூட்டங்களை நடத்தியவர்கள்தான் கபில் சிபல் மற்றும் குலாம் நபி ஆசாத். இரண்டு பேரும்தான் தலைமைக்கு தெரியாமல் நடத்த வேண்டும் என்பதற்காக சின்ன சின்ன கூட்டங்களாக இதை நடத்தி இருக்கிறார்கள். அதிகபட்சம் 5 பேருக்கு மேல் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ள கூடாது என்று கூறியுள்ளனர். பெரும்பாலும் இந்த கூட்டங்கள் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோர் வீடுகளில் மட்டுமே நடந்துள்ளது.

காங்கிரசுக்கு எதிரான குழு

காங்கிரசுக்கு எதிரான குழு

இந்த ஜி23 குழுதான் தற்போது காங்கிரசில் தலைமைக்கு எதிரான குழுவாக உருவெடுத்து இருக்கிறது. முதல் கூட்டம் முழுக்க முழுக்க ராகுல் காந்திக்கு எதிராக நடந்து இருக்கிறது. அதில்.. நாம் சோனியா காந்தி காலத்து ஆட்கள் என்பதால் ராகுல் எங்களை மதிக்கவில்லை.. எங்களை அவர் யமுனை ஆற்றில் போட பார்க்கிறார் என்று ராகுல் பற்றி கபில் சிபல், குலாம் நபி ஆகியோர் கூறியதாக கூறப்பட்டது. அதன்பின் சோனியா, ராகுல் ஆகியோர் வீக்கான லீடர்கள் என்றும் இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

 ராகுல் சித்து

ராகுல் சித்து

இந்த ஜி 23 மாநாட்டின் படி காங்கிரசுக்கு புதிய தலைமையை தேர்வு செய்ய வேண்டும். இதற்கு உட்கட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் எடுத்த முடிவுகளை கபில் சிபல், குலாம் நபி ஆசாத் ஆகியோர் சோனியாவிடம் அளிக்க முயன்ற போது, அதை கொடுக்காமல் ராகுல் காந்தி சில காலம் கேம் ஆடியதாக கூறப்படுகிறது. ஆனால் பின்னர் 23 பேரும் சேர்ந்து லெட்டர் எழுதிய நிலையில் அவசரமாக கடந்த 2020ல் காங்கிரஸ் கமிட்டி கூட்டம் நடந்தது. இன்னும் 6 மாதங்களில் காங்கிரஸ் கட்சிக்குள் தலைவர் பதவிக்கான தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை சோனியா காந்தியே காங்கிரஸ் இடைக்கால தலைவராக நீடிப்பார் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முடிவு 2020ல் எடுக்கப்பட்டது.

 இல்லை

இல்லை

ஆனால் இந்த முடிவு படி உட்கட்சி தேர்தல் நடக்கவில்லை. புதிய தலைவரும் தேர்வாகவில்லை. இதனால் கபில் சிபல், குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் கடுமையாக கோபம் அடைந்தனர். முக்கியமாக கபில் சிபல் கடுமையாக அப்செட் ஆகி இருக்கிறார். அதன்பின் சமீபத்தில் நடந்த 5 மாநில சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் மோசமாக தோல்வி அடைந்தது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா என்று ஐந்து மாநிலங்களில் காங்கிரஸ் கடுமையான தோல்வியை சந்தித்தது. இந்த தோல்வியை தொடந்து காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியில் இருக்கும் கபில் சிபல் உட்பட ஜி 23 தலைவர்கள் மீண்டும் அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இவர்கள் ஆலோசனை செய்தனர்.

 ஜி 23 எதிர்ப்பு

ஜி 23 எதிர்ப்பு

ஒரு பக்கம் ஜி 23 கூட்டம் நடக்க.. இன்னொரு பக்கம் சோனியா காந்தி தலைமையில் காரிய கமிட்டி கூட்டம் அதே மார்ச் மாதம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி தொடர்கிறார் என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் இதை ஜி 23 தலைவர்கள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக இதை கபில் சிபல் கடுமையாக எதிர்த்தார். காங்கிரஸ் கட்சி ஒரு வீட்டின் கட்சியாக இருக்க கூடாது. அது எல்லோருக்குமான கட்சியாக இருக்க வேண்டும் என்று கபில் சிபல் வெளிப்படையாக காங்கிரஸ் தலைமையை சீண்டினார்.

மீண்டும் கூட்டம்

மீண்டும் கூட்டம்

சோனியாவை மீண்டும் தலைவராக தேர்வு செய்ததற்கு எதிராக ஜி 23 கூட்டம் மீண்டும் கூடியது. கபில் சிபல் வீட்டில் எப்போதும் நடக்கும் கூட்டம் கடந்த மார்ச் மாதம் குலாம் நபி ஆசாத் வீட்டில் நடந்தது. காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கான காரணம், தலைமையிடம் இருக்கும் பிரச்சனை என்று பல விஷயங்களை இந்த கூட்டத்தில் இவர்கள் ஆலோசனை செய்தனர். இதில் சோனியாவிற்கு எதிராகவும், ராகுலுக்கு எதிராகவும் கபில் சிபல் பேசியதாக கூறப்பட்டது.

 நடந்தது என்ன?

நடந்தது என்ன?

அனைத்து மட்டங்களிலும் கூட்டு முடிவு எடுக்க கூடிய வகையில், அனைவர்க்கும் வாய்ப்பு அளிக்கும் தலைமையை காங்கிரசில் கொண்டு வர வேண்டும். அது மட்டுமே நாம் முன்னேறி செல்வதற்கு ஒரே வழி என்று கபில் சிபல் இதில் கூறியதாக கூறப்பட்டது. சோனியா காந்தியை கடுமையாக கபில் சிபல் இந்த கூட்டத்தில் எதிர்த்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில்தான் சமீபத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்ட உதய்பூர் கூட்டம் நடைபெற்றது. 1 வாரத்திற்கு முன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கபில் சிபல் கலந்து கொள்ளவில்லை.

நீக்கம்?

நீக்கம்?

அப்பவே கபில் சிபல் காங்கிரசில் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இதை தொடர்ந்து சோனியா உருவாக்கிய தேர்தல் ஆலோசனை குழுவில் குலாம் நபி ஆசாத் போன்றவர்கள் இடம்பெற்று இருந்தாலும் கபில் சிபல் பெயர் இடம்பெறவில்லை. ஒரு முக்கிய தலைவர்.. காங்கிரசின் பெரிய கூட்டத்தில் இல்லாதது சந்தேகத்தை எழுப்பியது. இதனால் கபில் சிபல் காங்கிரசில் இல்லையா என்ற கேள்வி வலுப்பெற்றது. அதோடு இந்த உதய்பூர் கூட்டம் பற்றியும் கபில் சிபில் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வந்தார்.

மவுனம்

மவுனம்

இந்த நிலையில்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக கபில் சிபல் அறிவித்துள்ளார். கடந்த மே 16ம் தேதியே காங்கிரசில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இவரின் வெளியேற்றம் சோனியா, ராகுல் தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஒவ்வொரு வருடமும் பல முக்கிய தலைவர்களை பல்வேறு காரணங்களுக்காக இழந்து வருகிறது. ரபேல் வழக்கு தொடங்கி பல வழக்குகளில் காங்கிரஸுக்காக கடுமையாக சட்ட போராட்டம் நடத்திய கபில் சிபல் அக்கட்சியில் இருந்து வெளியேறுவது.. காங்கிரசுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அடிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

English summary
Why did g23 leader Kapil Sibal leave congress party? What really happened? காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக கபில் சிபல் அறிவித்துள்ளார். கடந்த மே 16ம் தேதியே காங்கிரசில் இருந்து நான் விலகிவிட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X