திடீரென டெல்லி போன பிடிஆர்.. நேரா அவரையே பார்த்துட்டாரே.. மூத்த தலை கொடுத்து அனுப்பிய "மெசேஜ்"..ஆஹா
டெல்லி: தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டு உள்ளார். டெல்லியில் 3 முக்கியமான தலைவர்களை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. 10 அமைச்சர்களின் இலாக்காக்களில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதில் மூத்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் நிதி அமைச்சர் பொறுப்போடு கூடுதலாக அவருக்கு புள்ளியில் துறை பொறுப்பும் வழங்கப்பட்டது. புள்ளியில் துறையில் பிடிஆர் அனுபவம் பெற்றவர் என்பதால் அவருக்கு அந்த துறை வழங்கப்பட்டது.

டெல்லி
இந்த நிலையில்தான் பிடிஆர் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். நேற்று டெல்லிக்கு சென்றவர் வரிசையாக பல்வேறு சந்திப்புகளை மேற்கொண்டார். டெல்லி சென்ற பிடிஆர் முதலில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார். அவரிடம் மரியாதை நிமித்தமாக பிடிஆர் ஆலோசனைகளை மேற்கொண்டார். அதன்பின் தமிழ்நாட்டிற்கு வெளிநாட்டு முதலீடுகள் பல வருகின்றன. இதில் பல நட்பு நாடுகளின் முதலீடுகள் வருகின்றன என்பதால் அதை பற்றி வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஆலோசனை செய்து இருக்கிறார்.

சாலை போக்குவரத்து துறை அமைச்சர்
அதன்பின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தும் பிடிஆர் பேசி இருக்கிறார். மதுரையில் புறநகர் சாலை பணிகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த பணிகளுக்கு அனுமதி வழங்கியும் கூட பணிகள் தொடங்காமல் உள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் அமைச்சர் பிடிஆர் அவரிடம் பேசி இருக்கிறார். இதில் தமிழ்நாட்டில் தொடங்க வேண்டிய சில சாலை பணிகள் குறித்து நிதின் கட்கரி அமைச்சர் பிடிஆரிடம் தெரிவித்து உள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் தெரிவிக்க வேண்டிய சில விஷயங்களை அமைச்சர் பிடிஆரிடம் மெசேஜாக நிதின் கட்கரி சொல்லி அனுப்பி இருக்கிறார்.

அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா
விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவையும் இவர் சந்தித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் கேட்கும் கேள்விக்கு இவர்தான் மழுப்பலாக பதில் அளித்து வந்தார். தமிழ்நாடு விமான நிலையங்கள் குறித்த கேள்விகளுக்கு இவர் சரியாக பதில் அளிப்பது இல்லை. இந்த நிலையில் இவரை அமைச்சர் பிடிஆர் நேரிலேயே சென்று சந்தித்து விட்டார். அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவிடம் அமைச்சர் பிடிஆர் பரந்தூர் விமான நிலையம் பற்றி பேசினார். சென்னையில் விரைவில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுங்வார்ச்சத்திரம் அருகே உள்ள பரந்தூரில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது. ஆனால் இந்த விமான நிலையத்திற்கு மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு நிலவி வருகிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும்.

ஆலோசனை
சென்னை விமான நிலையம் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத காரணத்தாலும், இடநெருக்கடி காரணமாகவும் கடுமையாக சிரமப்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் விமான நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்யப்பட்டு பரந்தூர் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதற்கான நிலத்தை கையகப்படுத்தியதும் உடனே பணிகளை தொடங்குவது தொடர்பான ஆலோசனைகளை ஜோதிராதித்ய சிந்தியாவுடன் அமைச்சர் பிடிஆர் மேற்கொண்டார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications