விவசாயிகளைக் காரேற்றி கொன்றவர்களை கைது செய்யாதது ஏன் - வீடியோவை காட்டி மோடியிடம் கேட்ட பிரியங்கா
என்னை கைது செய்து காவலில் வைத்துள்ள அரசாங்கம் கார் மோதி விவசாயிகளை நசுக்கிய நபரை கைது செய்யாதது ஏன் என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கியவர்களை இன்னும் கைது செய்யாதது ஏன் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரியங்கா காந்தி பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அமைதியாக போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் ஏற்றி நசுக்கிய வீடியோ காட்சியையும் அவர் ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video
உத்தரப் பிரதேச மாநிலம் லட்சுமிபூரில் மாநில துணை முதலமைச்சர் மற்றும் மத்திய இணையமைச்சர் உள்ளிட்டோர் விழா ஒன்றிற்கு பங்கேற்க சென்ற போது அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் விவசாயிகள் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் அமைச்சர் காருடன் உடன் வந்த கார் ஒன்று போராட்டக்காரர்கள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே இரண்டு விவசாயிகள் உயிரிழந்தனர். சிகிச்சை பலனின்றி மேலும் இரண்டு விவசாயிகள் உட்பட 8 பேர் இதில் உயிரிழந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைய முயன்ற காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை உத்தரபிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தான் கடந்த 28 மணி நேரமாக எவ்வித உத்தரவு அல்லது வழக்குப்பதிவு இல்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை ஏன் உங்கள் அரசாங்கம் தடுத்து வைத்துள்ளது? என்றும் பிரியங்கா கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள அவர், இந்த உயிரிழப்பு சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யாமல் எதிர்க் கட்சியினரை ஏன் கைது செய்துள்ளீர்கள் என்றும் பிரதமருக்கு கேள்வியெழுப்பியுள்ளார்.
இன்று உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெறும் 'ஆசாதி -75 புதிய நகர்ப்புற இந்தியா' என்கிற நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார். இதை குறிப்பிட்டு பேசிய பிரியங்கா, பிரதமர் மோடி சம்பவம் நடத்த இடமான லட்சுமிபூருக்கு செல்வரா? என்றும் கேள்வியெழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் லக்னோவில் இந்த விழா கொண்டாட உங்களுக்கு என்ன தார்மீக அதிகாரம் உள்ளது என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் லக்னோ வருகைக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, மாநிலத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தில் விவசாயிகள் மீது ஒரு எஸ்யூவி ஓடும் வைரல் வீடியோவை ட்வீட் செய்தார். காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரதமருக்கு ஒரு கூர்மையான கேள்வியுடன் அதைத் தொடர்ந்தார்.
பிரியங்கா காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், இதை பாருங்கள்... இது என்ன வென்று தெரிகிறதா என்று பிரியங்கா கேட்டு விட்டு தனது மொபைலை காட்டுகிறார். நெஞ்சை பதை பதைக்க வைக்கும் அந்த வீடியோவில், அமைதியாக சாலையில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளின் பின்புறம் அந்த வழியாக வேகமாக வரும் கார் மோதிவிட்டு நிற்காமல் செல்கிறது. அதன்தொடர்ச்சியாக இரண்டு கார்கள் அதேபோல செல்கின்றன. இந்த வீடியோவை டுவிட்டரில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி ஐயா, உங்கள் அரசாங்கம் கடந்த 28 மணிநேரம் எந்த உத்தரவும் இல்லாமல் மற்றும் எப்ஐஆர் இல்லாமல் என்னை காவலில் வைத்துள்ளது. உணவு வழங்கும் விவசாயிகளை நசுக்கிய இந்த நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை. ஏன்?" என்று சுளீர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள வீடியோவில் அந்த காரில் இருந்தவர்கள் யார் என்று தெளிவாக தெரியவில்லை.
நேற்றைய தினம் லக்கிம்பூர் பகுதியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்திக்க சென்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவை காலையில் கைது செய்த உத்திரபிரதேச போலீசார், சீத்தாப்பூர் பயணியர் மாளிகையில் காவலில் வைத்தனர். இந்த நிலையில் அசுத்தமான அறையை, பிரியங்கா காந்தி துடைப்பத்தால் அறையை சுத்தம் செய்யும் காட்சி வெளியாகியது. சுத்தமில்லாத அறையை பார்த்த காங்கிரஸ் தலைமை, மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் குறித்து கேள்வி எழுப்பி கிண்டல் அடித்துள்ளனர்.
விபத்து ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படும் காரில் மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் அமைச்சர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இந்த விபத்தையடுத்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.45 லட்சமும், படுகாயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சமும் இழப்பீடாக மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. இந்த சம்பவத்தையடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கண்டன போராட்டத்தை நாடு முழுவதும் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு உள்ளார். லக்கிம்பூர் கேரி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் மோதிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்த வீடியோ ஒன்றை காங்கிரஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கருப்பு நிற எஸ்யுவி கார் ஒன்று போராட்டம் நடைபெற்ற கூட்டத்தின் நடுவே திடீரென பாய்வதை காணமுடிகிறது. இதே வீடியோவை பிரியங்கா, ரன்தீப் சிங் சுர்ஜிவாலா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் பகிர்ந்துள்ளனர்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications