இவ்வளவு அமளி துமளிக்கு இடையேயும்.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரவில்லை.. ஏன் தெரியுமா?
டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயராமல் உள்ளது. இதற்கு மத்திய அரசின் திட்டம் தான் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 80 டாலர்களாக இருந்தபோது இந்தியாவில் பெட்ரோல் விலை ரூ.100யை தாண்டியது.
இதற்கிடையே உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து பெட்ரோல், டீசல் விலை மாற்றி அமைக்கப்படவில்லை. 128 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் ஏற்படவில்லை.

கச்சா எண்ணெய் விலை உயர்வு
இந்நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதை கண்டிக்கும் வகையில் ரஷ்யா மீது அமெரிக்கா உள்பட பல நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கவும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கச்சா எண்ணெயானது பீப்பாய்க்கு 139.13 டாலர் என்ற நிலையை எட்டியது. பிறகு 130.29 டாலராக குறைந்தது. இருப்பினும் ஒரேநாளில் 10 சதவீதம் அதாவது 12 டாலர் வரை அதிகரித்தது. அதாவது 10 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது.

14 ஆண்டு இல்லாத நிலை
இது கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வாகும். அதாவது இதற்கு முன்பு 2008ல் கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 145 டாலராக இருந்தது. அதன்பிறகு அதிகபட்ச அளவை தற்போது எட்டி இருக்கிறது. இதனால் 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

மாற்றமில்லை
அதன்படி சர்வதேச சந்தையின் விலை அடிப்படையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.20 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியானது. இந்த விலை உயர்வால் தானாகவே அத்தியாவசிய பொருட்களின் விலையும் உச்சம் பெரும். இதனால் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். ஆனால் தேர்தல் முடிவடைந்தும் அதிர்ஷ்டவசமாக பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தவில்லை.

மத்திய அரசு திட்டம்
இதற்கு மத்திய அரசின் புதிய திட்டங்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. குறிப்பாக சில்லறை வர்த்தகத்தில் டீசல், பெட்ரோல் விலையை உயர்த்தினாலும் பொதுமக்களை நேரடியாக பாதிக்காத வகையில் கலால்வரியை குறைக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த நவம்பரில் பெட்ரோல் மீது ரூ.5, டீசல் மீது ரூ.10 கலால்வரி குறைக்கப்பட்டது. தற்போதும் ஒரு லிட்டர் பெட்ரோல் மீது 27.90, டீசல் மீது 21.80 என கலால்வரி நீடிக்கிறது. இதனை கருத்தில் கொண்டு தான் மத்திய அரசு இதுதொடர்பாக திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குறைய வாய்ப்பு
இதற்கிடையே தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை உயராது எனவும், அடுத்த 2 வாரத்தில் 100 டாலர் வரை குறைய வாய்ப்புள்ளதாகவும் துறை சார் வல்லுனர்கள் கூறியுள்ளனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications