புதிய இந்தியா எழுச்சி பெறுவதை உலக நாடுகள் பார்க்கின்றன.. ஜனாதிபதி திரெளபதி முர்மு சுதந்திர தின உரை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தேசிய கல்வி கொள்கை எதிர்கால தலைமுறையை அடுத்த கட்ட தொழில் புரட்சிக்கு தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டது. மேலும் இந்த கல்வி முறை என்பது நம்மை பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது. இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதோடு சமீபத்திய ஆண்டுகளில் புதிய இந்தியா எழுச்சி பெற்று வருவதை உலக நாடுகள் பார்க்கின்றன'' என நாட்டு மக்களுக்காக சுதந்திர தின உரையாற்றிய ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறினார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நாளை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. டெல்லி செங்கோட்டையில் நாளை பிரதமர் நரேந்திர மோடி தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.

முன்னதாக இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஹிந்தி மொழியில் ஜனாதிபதி திரெளபதி முர்மு கூறியதாவது:

ஜனாநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

ஜனாநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி

இந்தியாவின் சுதந்திர தினம் எனும் இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாற்றுவதி நான் மகிழ்ச்சி கொள்கிறேன். நாட்டிற்காக தியாகம் செய்த அத்தனை சுதந்திர போராட்ட வீரர்களையும் நான் நினைவு கூறுகிறேன். இந்தியாவின் சுதந்திரம் என்பது ஜனநாயகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பல்வேறு தருணங்களில் ஜனநாயகத்தின் திறன் என்ன என்பதை பல்வேறு நாடுகளுக்கு இந்தியா உணர்த்தியுள்ளது. இந்தியா வேகமாக வளர்ந்து வருவதை உலக நாடுகள் பார்க்கின்றன.

தியாகிகளின் கனவு நிறைவேற்றப்படும்

தியாகிகளின் கனவு நிறைவேற்றப்படும்

இன்றைய தினம் நமது மூவர்ண தேசியக்கொடி நாட்டின் ஒவ்வொரு வீடுகளில் பறந்து வருகிறது. இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தை மறக்காது. தியாகிகளின் கனவுகள் நிவைற்றப்படும். இந்திய சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு அளப்பரியது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியின மக்களை பிராந்திய வீரர்களாக மட்டுமின்றி நாட்டின் அடையாளமாக மாறியுள்ளனர். நாட்டின் பெருமைமிகு அடையாளமாக பழங்குடி மக்கள் மாறியுள்ளனர். நவம்பர் 15ம் தேதியை ‛ஜனஜாதியா கவுரவ் திவாஸ்' தினமாக அறிவித்து இருப்பது வரவேற்புக்குரியது.

 வேகமாக வளரும் பொருளாதாரம்

வேகமாக வளரும் பொருளாதாரம்

கொரோனாவால் உலக நாடுகள் பலவும் பொருளாதார பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில் இந்தியா அதில் இருந்து வேகமாக மீண்டுள்ளது. மீண்டும் வரும் நமது பொருளாதாரம் அனைத்து மக்களுக்கு பேருதவியாக இருக்கும். இந்தியாவின் பொருளாதாரம் என்பது வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அரசும், பொருளாதார கொள்ளை வகுப்பாளர்களும் பெருமைக்குரியவர்களாக உள்ளனர்.

புதிய இந்தியாவின் நம்பிக்கை

புதிய இந்தியாவின் நம்பிக்கை

புதிய இந்தியாவின் நம்பிக்கையாக இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் உள்ளனர். நாட்டில் பாலின பாகுபாடு குறைந்து வருகிறது. இந்தியாவில் பெண்களுக்கு சமஉரிமை அளிக்கப்பட்டு வருகிறது. பெண்கள் பல துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். நம்நாட்டின் மகள்கள் அனைவரும் நாட்டின் மிகப்பெரும் நம்பிக்கையாக மாறியுள்ளனர். பெண்கள் அரசியலில் சாதிப்பது என்பது ஆரோக்கியமானது. டிஜிட்டல் முறையில் நாட்டின் வளர்ச்சி முக்கியமானதாக உள்ளது. எதிர்கால சந்ததிக்காக இயற்கையை பாதுகாப்பது நம்து கடமை. நம்மிடம் உள்ள வளங்களை காப்பாற்ற வேண்டும். நாட்டு மக்கள் அனைவரக்கு வளமான வாழ்வு கிடைக்க வாழ்த்துகள்.

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை

தேசிய கல்வி கொள்கை எதிர்கால தலைமுறையை அடுத்த கட்ட தொழில் புரட்சிக்கு தயார்படுத்துவதை நோக்கமாக கொண்டது. மேலும் இந்த கல்வி முறை என்பது நம்மை பாரம்பரியத்துடன் மீண்டும் இணைக்கிறது. கல்வி, பொருளாதாரம் சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தான் நல்ல ஆட்சிக்கான மாற்றமாக உள்ளது. அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்த்.
இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+