டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போக்குவரத்து விதிகளில் மிகப்பெரிய மாற்றம்.. தண்டனைகளை தாண்டி இனி இந்த பிரச்சனை வரலாம்!

Google Oneindia Tamil News

டெல்லி: திருத்திய அமைக்கப்பட்ட புதிய மோட்டார் வாகன விதிகளின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக செல்லுதல், ரேஸில் ஈடுபடுதல், ஆபத்தாக வாகனம் ஓட்டுதல் மற்றும் ஹெல்மெட் அணியாமல் இருப்பது போன்ற போக்குவரத்து மீறல்களுக்காக மீண்டும் மீண்டும் குற்றவாளிகளாக இருக்கும் நபர்களின் பட்டியலை மாநில போக்குவரத்துத் துறை இனி அதன் இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிடும்.

டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளியான ஒரு அறிக்கையின்படி, வாகனத்தை அலட்சியமாக ஓட்டி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட்டு அவமானப்படுத்துவதன் மூலம் அவர்களை பயமுறுத்த முடியும். இதன் மூலம் வாகனங்களை அவர்கள் பொறுப்புடன் ஓட்டுவார்கள் என்ற நம்பிக்கையில் இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

எனினும், வாகன விதிமீறல் குற்றவாளிகளின் புகைப் படங்கள் மற்றும் அவர்கள் செய்த செயல்ககளை பகிரங்கப்படுத்தும் முன்பு அதுபற்றி சம்மந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கப்படும். அவர்கள் இதை எதிர்த்து ஒரு மாதத்தில் மேல்முறையீடு செய்யலாம். அங்கு அவர்களது முறையீடு நிராகரிக்கப்பட்டால் அவர்களின் புகைப்படங்களும், திரும்ப திரும்ப செய்த குற்றங்களும் பகிரங்கப்படுத்தப்படும். ஒரு மாதத்திற்குள் மேல்முறையீட்டுக்கு செல்லவில்லை என்றாலும் பகிரங்கப்படுத்தப்படும்.

உங்கள் பெயர் வரும்

உங்கள் பெயர் வரும்

இதற்காக மாநில அரசின் போக்குவரத்துத் துறைகள் தங்கள் வலைதளத்தில் "சட்டத்தின் 19 வது பிரிவின் உட்பிரிவு (1A) இன் கீழ் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்தல்" என்ற பெயரில் ஒரு தனி பிரிவை உருவாக்க வேண்டும். இந்த லிஸ்டை, பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் வந்து எளிதில் கணிணியில் எளிதில் படிக்ககூடிய வகையில் இருக்க வேண்டும். அத்துடன் அச்சிடக்கூடிய மற்றும் மற்றவர்களுக்கு பகிரக்கூடிய வகையில் பி.டி.எஃப் வடிவத்தில் இருக்க வேண்டும்.

எளிதாக அணுகுமுறை

எளிதாக அணுகுமுறை

இதனிடையே போக்குவரத்து விதிமுறைகளின் புதிய மாற்றங்கள் ஆன்லைனில் இருப்பதால் போக்குவரத்து தொடர்பாககு உரிய சேவை பெறுவதற்கு மக்களுக்கு வசதியாக இருக்கும்,. விண்ணப்பத்தை தாக்கல் செய்வது, மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தல் மற்றும் குற்றங்களுக்கு சரணடைதல், ஓட்டுர் உரிமம் புதுப்பித்தல் மற்றும் பழகுனர் உரிமம் பெறுதல் போனற்வற்றை போன்ற சேவைகள் எளிதாக இருக்கும்.

எந்த அடிப்படை

எந்த அடிப்படை

போக்குவரத்து விதிகளில் மற்றொரு முக்கிய அம்சமாக வணிக வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் அரசாங்கம் கைவிட்டுவிட்டது என்றும் இது "குறைந்தபட்ச பயிற்சி மற்றும் மொழிகளை புரிந்துகொள்ளுதல்" என்ற கட்டாயத் தேவையுடன் மாற்றப்பட்டுள்ளது என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா தனது அறிக்கையில் கூறியுள்ளது.

புதிய வாகனம் பதிவு

புதிய வாகனம் பதிவு

மாற்றியமைக்கப்பட்ட விதிகளின் படி. புதிய வாகனங்களின் விஷயத்தில் வாகன பதிவு விற்பனையாளர்களின் கையில் இருக்கும் என்றும் அறிவுறுத்துகிறது. இதன் பொருள் ஆர்டிஓக்களுக்கு பதிவு செய்ய வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறது. சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் போது மக்களுக்கு இதுபற்றி அனைத்து தகவலும் தெரியவரும். அதுவரை காத்திருப்போம்.

English summary
Central Motor Vehicle new Rules, the state படிஎவ transport departments will be putting out a list of persons on their portals who are repeat offenders for traffic violations such as, drunk driving, speeding, racing, dangerous driving and even for not wearing helmets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X