கோடீஸ்வரர்!.. ஆனாலும் 3 மாதத்திற்கு ஒருமுறை டெலிவரி செய்யும் சொமேட்டோ 'சிஇஓ'.. எதற்காக தெரியுமா?
டெல்லி: பெரும் பணக்காரர் ஆன சொமேட்டோ சிஇஓ திபேந்தர் கோயல், 3 மாதத்துக்கு ஒருமுறை நேரடியாக சொமெட்டோ டெலிவரி பணியில் ஈடுபட்டு வருவது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய உணவு விநியோக நிறுவனங்களில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிறுவனங்களில் ஒன்று சொமேட்டோ. இந்த நிறுவனத்தின் சிஇஒ திபேந்தர் கோயல்.
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தற்போது 24 நாடுகளில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட நகரங்களில் தனது உணவு விநியோக சேவையை செய்து வருகிறது.

சொமேட்டோ நிறுவனம்
ஒரு ஆண்டுக்கு பல பில்லியன்கள் வருவாய் ஈட்டும் மிகப்பெரிய நிறுவனமாக சொமேட்டோ உருவெடுத்துள்ளது. சென்னை போன்ற நகரங்களில் 5 நிமிடம் சாலையை பார்த்தால் உணவு விநியோக நிறுவனங்களின் ஏஜெண்ட்கள் பலரும் சாலைகளில் சிட்டாக பறந்து செல்வதை காண முடியும். ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களின் அசுரத்தமான வளர்ச்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போல இது அமைந்துள்ளது.

உணவு டெலிவரியில் சொமேட்டோ சிஇஓ
இப்படி பல கோடிகளில் வருமானம் ஈட்டினாலும் தற்போதும் சொமேட்டோ நிறுவனத்தின் சி இ ஒ தீபேந்தர் கோயல், இப்போதும் அவ்வப்போது உணவு விநியோகம் செய்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா... ஆனால் இதுதான் உண்மை.... ஆன்லைனில் வேலை வாய்ப்பு பற்றிய தகவல்களை அளிக்கும் Naukri.காம் நிறுவனத்தின் துணைத்தலைவர் சஞ்சீவ் பிக்சந்தனிதான் இந்த உண்மையை பொது வெளியில் பகிர்ந்துள்ளார்.

ஒரு நாள் உணவு டெலிவரி செய்கிறார்
தீபேந்தர் கோயல் தற்போதும் காலாண்டுக்கு ஒருமுறை ஒருநாள் சொமேட்டோ டெலிவரி ஏஜெண்டாக சென்று நேரடியாக உணவுகளை விநியோகம் செய்கிறாராம். சாதாரண டெலிவரி ஏஜெண்ட் போல சிவப்பு நிற ரெட் டி ஷர்ட் அணிந்து கொண்டு மிக எளிமையாக தீபேந்தர் கோயல் உணவுகளை டெலிவரி செய்வதால் இதுவரை யாரும் கண்டுபிடித்தது இல்லை என்றும் சஞ்சீவ் பிக்சந்தனி தெரிவித்துள்ளார்.

அனைத்து மூத்த மேலாளர்களும்
தீபேந்தர் கோயல் மட்டுமல்ல.. சொமேட்டோ நிறுவனத்தின் அனைத்து மூத்த மேலாளர்களும் குறைந்தது காலண்டுக்கு ஒருமுறையாவது இப்படி நேரடியாக உணவு விநியோகத்தில் ஈடுபடுகிறார்களாம். கடந்த மூன்று ஆண்டுகளாக இப்படி நேரடியாக உணவு விநியோகம் செய்தாலும் இதுவரை யாரும் தன்னை அடையாளம் கண்டு கொண்டதில்லை என தீபந்தர் கோயல் கூறியதாகவும் சஞ்சீவ் பிக்சந்தனி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

நெட்டிசன்கள் பாராட்டு
வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சேவைகளில் மேம்படுத்த வேண்டிய அம்சங்கள் ஆகியவறை நேரடியாக தெரிந்து கொள்ள உணவு விநியோகத்தில் ஈடுபடுவதாக தெரிகிறது. நெட்டிசன்கள் பலரும் தீபந்தர் கோயலின் இந்த முயற்சியை வெகுவாக பாராட்டி வருகின்றனர். உணவு விநியோக ஏஜெண்ட்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் சந்திக்கும் சவால்களை நேரடியாக களத்தில் வந்தே தெரிந்து கொள்ள முடியும் என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

உபர் நிறுவனம்
இதேபோன்று உபர் நிறுவனத்தின் தெற்காசிய மற்றும் இந்திய பிரிவுகளுக்கான தலைவர் பிரப்ஜீத் சிங், இந்த ஆண்டு துவக்கத்தில், நேரடியாக அவரே வாடிக்கையாளர்களுக்கு காரை இயக்கினார். கள நிலவரங்களை நேரடியாக அறிந்து கொள்ளும் வகையில் இந்த முயற்சியை மேற்கொண்டு இருந்தார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications