Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலினை சந்திக்கலாம்னு ஏமாத்திட்டாங்க.. ட்விட்டரில் வந்த குமுறல்.. எம்.பி. செந்தில்குமார் பதில்

Subscribe to Oneindia Tamil

தருமபுரி: முதலமைச்சர் முக ஸ்டாலினை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்யப்படும் என தொண்டர்களிடம் வாக்குறுதி வழங்கியவர்கள் அதனை நிறைவேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என தருமபுரி திமுக எம்.பி. செந்தில் குமார் தெரிவித்து உள்ளார்.

 STALIN ANI செயலியால் சர்ச்சை

STALIN ANI செயலியால் சர்ச்சை

சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்ட STALIN ANI என்ற செயலியில் அதிகபடியான நபர்களை சேர்க்கும் திமுக தொண்டர்கள் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்திக்க அழைத்து செல்லப்படுவார்கள் எனக்கூறிவிட்டு இன்னும் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என சமூக வலைதளங்களில் திமுக தொண்டர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

 புதுக்கோட்டை தொண்டர் குமுறல்

புதுக்கோட்டை தொண்டர் குமுறல்

இதுகுறித்து புதுக்கோட்டையை சேர்ந்த வெற்றிகொண்டான் என்ற தி.மு.க. தொண்டர் தனது ட்விட்டர் பக்கத்தில், "திமுக அழிந்து போகாதா, ஒழிந்து போகாதா! என்று ஏங்கியவர்கள், கடந்த 10 வருடமாக திமுக தலைவரை பார்க்க தயங்கியவர்கள் , திமுக வெற்றிக்கு துரும்பை கூட கிள்ளி போடாத நூற்றுக்கணக்கானவர்கள், திமுக வெற்றிக்கு பிறகு தலைவரை ஈசியாக சந்திக்கின்றனர். ஆனால் தேர்தல் அப்போ கழகம் சொன்னபடி உழைத்து மாவட்ட வாரியாக ஸ்டாலின் அணி செயலியில் அதிக எண்களை பெற்ற கழக தொண்டர்களை தலைவர் இன்னும் சந்திக்க வில்லை. "சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற கழகம் ஏன் செய்யவில்லை? எப்போது தலைவரே சந்திக்க போறீங்க கட்சியினருக்கு கழகம் கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள் முதலமைச்சர் அவர்களே.." எனக்குறிப்பிட்டு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களையும், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்களையும் டேக் செய்திருந்தார்

 டீசர்ட் கூட தரல

டீசர்ட் கூட தரல

இதற்கு பதிலளித்த சென்னையை சேர்ந்த அன்பழகன் என்ற திமுக தொண்டர், "வெற்றிகொண்டான் கூறுவது உண்மை நாங்கள் அயராது பாடுபட்டு பரப்புரை செய்து கடைசியில் தலைவரை பார்க்க முடியவில்லை. அது மட்டுமல்ல, எங்களுக்கு டீசர்ட் கூட தரல தேர்தல் முடிந்து தருவோம் என்று சொன்னார்கள். இன்னும் அந்த செயலியை போன்ல தான் வச்சிருக்கேன் என்றாவது ஒரு நாள் நம்மள கூப்பிடமாட்டார்களானு" என பதிவிட்டு தருமபுரி மக்களவை உறுப்பினர் செந்தில்குமாரை டேக் செய்தார்.

 திமுக எம்.பி. செந்தில்குமார் கேள்வி?

திமுக எம்.பி. செந்தில்குமார் கேள்வி?

இதனை ரீட்டுவீட் செய்து பதிலளித்த செந்தில்குமார், "உங்களுக்கு அப்படி ஒரு வாக்குறுதி அளித்தார்கள் என்றால் அவர்கள் அதை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இதனை யார் பொறுப்பேற்றார்கள் என்று தெரிந்தால் சொல்லுங்கள் நானும் முயன்று பார்க்கிறேன்." எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

 முதலமைச்சரை சந்திக்க கோரிக்கை

முதலமைச்சரை சந்திக்க கோரிக்கை

திமுக எம்.பியின் கருத்துக்கு பதிலளித்துள்ள சுரேஷ் குமார் என்ற திமுக தொண்டர், "ஏதாவது செய்து தலைவரை பார்க்க நடவடிக்கை எடுங்கள். இது எங்களுக்கு மேலும் கட்சிக்காக உழைக்க உறுதுணையாக இருக்கும். இந்த ஆப் மூலம் எனது பல நண்பர்களை இழந்துள்ளேன். இவையெல்லாம் தலைவரை நேரில் பார்க்கவேண்டும், தளபதி முதல்வராக வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுக்காக மட்டுமே." எனப் பதிவிட்டு உள்ளார்.

 பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் மீது தொண்டர் புகார்

பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் மீது தொண்டர் புகார்

வினோத் என்ற நபர் அளித்துள்ள பதிலில், "பிரசாந்த் கிஷோர் கம்பெனி தான். ரீடுவீட் பண்ணுங்க... டுவிட் போடுங்க, முகநூலில் பகிருங்கள், வாட்சப்பில் பகிருங்கள், வாட்சப் டிபி வையுங்கள், டிரெண்ட் பண்ணுங்க புள்ளிகள் கிடைக்கும் முக்கிய தலைவர்கள், கட்சி தலைவரை பாக்கலாம்னு சொல்லி ஏமாற்றிவிட்டார்கள்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+