தர்மபுரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

’நான் கிறிஸ்டியன்’ தேசியக் கொடியை ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியை ‘எஸ்கேப்’! 17 பி-யை கையிலெடுத்த அரசு!

Google Oneindia Tamil News

தருமபுரி : தருமபுரியில் தான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் தேசியக்கொடி ஏற்றி வணக்கம் செலுத்த மாட்டேன் என கூறிய தலைமை ஆசிரியை மீது புகார் எழுந்த நிலையில் அவர் மீது 17 பி பிரிவின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற நிலையில் 75 ஆவது சுதந்திர தின பெருவிழா கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை சுதந்திர தின அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டது.

கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் சுதந்திர தின பவள விழாவை வெகு விமர்சையாக கொண்டாடும் வகையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் மூன்று நாட்கள் தேசியக்கொடி ஏற்றுக்கொள்ளலாம் மத்திய அரசு சிறப்பு அனுமதியினை அளித்தது.

1 மணி நேரம்தான்.. எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதிகள் கொடுத்த 1 மணி நேரம்தான்.. எடப்பாடி, ஓபிஎஸ்ஸுக்கு நீதிபதிகள் கொடுத்த

 சுந்ததிர தினம்

சுந்ததிர தினம்

இதையடுத்து நாடு முழுவதும் அஞ்சலகங்கள் மூலமாக தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டதோடு பாஜகவினர் வீடு வீடாக சென்று தேசிய கொடியை வழங்கினர். இதை அடுத்து பொதுமக்கள் ஆகஸ்ட் 13,14,15 ஆகிய தேதிகளில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி தங்கள் தேசிய உணர்வினை வெளிப்படுத்தினர். மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் கட்டிடங்களிலும் தேசிய கொடிகள் பட்டொளி வீசி பறந்தது.

தேசிய கொடியேற்ற மறுப்பு

தேசிய கொடியேற்ற மறுப்பு

இதனிடைய தர்மபுரி மாவட்டத்தில் தலைமை ஆசிரியை ஒருவர் தான் தேசியக்கொடி ஏற்ற மாட்டேன் என அடம் பிடித்து சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கண்டனங்களையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகேவுள்ள பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி என்பவரே, தேசியக்கொடியினை ஏற்ற மறுத்தவர். பேடரஅள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த சுதந்திர தினவிழா கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

யகோபாவின் சாட்சி

யகோபாவின் சாட்சி

தேசியக்கொடியை பள்ளியின் தலைமை ஆசிரியை ஏற்ற மறுத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதே பள்ளியில் பணிபுரியும் முருகன் என்ற ஆசிரியரால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இது குறித்து சம்மந்தபட்ட தலைமை ஆசிரியரிடம் கேட்ட போது தான், யகோபாவின் சாட்சி என்ற கிருஸ்த்துவ அமைப்பின் ஒரு பகுதியை சார்ந்தவர் என்றும், தாங்கள் தங்களின் கடவுளை மட்டுமே வணங்குவோம், தங்களது வணக்கமும் தங்கள் தெய்வத்திற்கு மட்டுமே என கூறியுள்ளார்.

ஆசிரியைக்கு நோட்டீஸ்

ஆசிரியைக்கு நோட்டீஸ்

அரசு பள்ளியின் தலைமை ஆசிரியை ஒருவர் சுதந்திர தினவிழாவில் தேசியக்கொடி ஏற்றபடாத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர். மேலும் அப்பகுதி மக்களும் தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இந்நிலையில் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி அவசர அவசரமாக மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு பள்ளிக்கு வராமல் இருந்துள்ளார். இந்நிலையில் தலைமை ஆசிரியை மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது என 17 பி என்ற பிரிவின் கீழ் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் ஒழுங்குமுறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். இதற்கு உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றால் அவர் பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது

English summary
The school education authorities have issued a notice to take disciplinary action under section 17B against the head teacher who said she would not salute the national flag at Dharmapuri.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X