தல டோணியின் அடுத்த அவதாரம்

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil
தல டோணியின் அடுத்த அவதாரம்- வீடியோ

துபாய்: டி-20 போட்டிகளில் விளையாடலாமா கூடாதா என்று மற்றவர்கள் விவாதம் செய்து கொண்டிருக்கும் வேளையில், இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் கிரிக்கெட் அகாதெமியை, துபாயில் ஆரம்பித்துள்ளார் தல டோணி.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் டோணி, சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டி-20 போட்டியில் மெதுவாக விளையாடியதாக முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

Dhoni’s new avatar

36 வயதாகும் டோணி, இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று விவிஎஸ் லக்ஷ்மண் முதலில் கூற, இதுதான்டா சான்ஸ் என்று பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றனர்.

அதே நேரத்தில் கேப்டன் விராட் கோஹ்லி, கோச் ரவி சாஸ்திரி மற்றும் பல முன்னாள் வீரர்கள் டோணிக்கு விசில் போடு என்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த விவாதங்கள் நடக்கும் நேரத்தில், துபாயில், இளம் கிரிக்கெட் வீரர்களை உருவாக்கும் புதிய கிரிக்கெட் அகாதெமியை டோணி துவக்கியுள்ளார். உலகில் வேறெங்கும் இல்லாத வசதிகள் இங்கு உள்ளன. இங்கு இந்தியாவில் இருந்து பல சிறந்த கோச்கள் வந்து பயிற்சி அளிக்க உள்ளனர்.

டோணியின் இளம்வயது நண்பரும், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி முன்னாள் வீரருமான மிஹிர் திவாகர் தலைமையில் இந்த அகாதெமி செயல்பட உள்ளது.

தல டோணி சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், பல புதிய டோணிக்கள் கிடைக்க உள்ளனர்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Indian cricketer Dhoni starts Academy in Dubai
Please Wait while comments are loading...