பாத்திருக்க வாய்ப்பே இல்ல.. இப்படி எல்லாம் திருவிழாவா? சேற்றில் முக்கி செருப்பால் அடித்து.. வினோதம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே கோவில் திருவிழாவையொட்டி சேற்றையும் மாடுகளுக்கு ஊற்றும் கழனிதண்னீரையும் கலந்து உடம்பில் பூசி, பக்தர்களை விளக்குமாறு மற்றும் செருப்பால் அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய வினோத திருவிழா நடைபெற்றது.
அய்யலூர் அருகே உள்ள தீத்தாகிழவனிரில் காளியம்மன், மாரியம்மன், பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கோவில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கி நடைபெற்று வந்த திருவிழாவில் அம்மன் வீதிஉலா நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவில் திருவிழா
தொர்ந்து பூக்குழி இறங்குதல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்கள் செலுத்தும் நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. திருவிழாவின் இறுதி நாளான செவ்வாய்க்கிழமையன்று சேத்தாண்டி வேடம் என்ற வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.

சேற்றை பூசி நேர்த்திக் கடன்
அதன்படி நேர்த்திக்கடன் செலுத்தியவர்கள் கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு உடலில் சேறு, கரி போன்றவற்றை பூசிக்கொண்டு கோயில் முன்பாக அமர்ந்திருப்பர். அதன் பின்னர் உடைந்த மண் கலயத்தில் மாடுகளின் கஞ்சித் தொட்டியில் உள்ள பழைய சாதத்தை எடுத்து வந்து செருப்பு மற்றும் துடைப்பத்தில் தொட்டு ஒவ்வொருவர் தலையிலும் அவர்களது உறவினர்கள் அடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

கோடைக்கால நோய்கள்
அதனைத் தொடர்ந்து அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று கோயில் குளத்தில் நீராடி நேர்த்திக்கடனை முடித்தனர். இதுகுறித்து பக்தர்கள் கூறியபோது இது போன்ற நேர்த்திக் கடனை பல ஆண்டுகளாக தொடர்ந்து செலுத்தி வருகிறோம். உடலில் சேறு பூசிக் கொள்வதால் கோடை காலத்தில் சரும மற்றும் உஷ்ண நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.

வேண்டுதல் நிறைவேறும்
மேலும் துடைப்பம் மற்றும் செருப்பால் அடி வாங்குவதன் மூலம் சகிப்புத்தன்மை பெருகி சண்டை சச்சரவுகள் இன்றி வாழ வழி ஏற்படும் என்று தெரிவித்தனர். அதன் பின்னர் அம்மனை கங்கையில் கரைத்தல் நிகழ்ச்சியுடன் திருவிழா நடைபெற்றது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
சேலம் கோவிலில் எல்லாமே ஜோடிக்கள்.. என்ன ஒரு வேகம்.. வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவம் -
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications