திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சினிமால அர்ஜுன் எப்படியோ? அதுமாதிரி அதிமுகவில் ‘இவர்’! திண்டுக்கல் சீனிவாசன் பற்றி தெரியாத ‘ரகசியம்’

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : அதிமுகவில் பல்வேறு அமைச்சர்கள் இருந்தாலும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தற்போது வரை முக்கிய தலைவராக இருக்கிறார். நடிகர் அர்ஜுனுக்கும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது அது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக பல்வேறு யூகங்களும் பரபரப்புகளும் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பது பலருக்கும் தெரியவில்லை.

அந்த அளவுக்கு அரசியல் சூழ்நிலைகள் ஒவ்வொரு நாளும் மாறி வருகிறது பொதுக்குழு கூட்டத்தில் இருந்து ஓபிஎஸ் வெளியேற்றப்பட்டது தொடங்கி தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வாதங்கள் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூழல் நிலவுகிறது.

சூப்பர்.. 1 லட்சம் அடிக்கு மேலே.. மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'! சூப்பர்.. 1 லட்சம் அடிக்கு மேலே.. மூவர்ணக் கொடியை விண்வெளியில் பறக்கவிட்ட 'ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா'!

திண்டுக்கல் சீனிவாசன்

திண்டுக்கல் சீனிவாசன்

இது ஒரு புறம் இருக்க அதிமுகவை பொருத்தவரை அதிமுக பொதுச்செயலாளருக்கு அடுத்த பதவி என்றால் அது பொருளாளர் பதவி தான். அந்த பொருளாளர் பதவியை முன்னாள் அமைச்சரான திண்டுக்கல் சீனிவாசன் கைப்பற்றி இருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த பதவியை அலங்கரித்தவர் தான் திண்டுக்கல் சீனிவாசன்.

அரசியல் பயணம்

அரசியல் பயணம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமான அதிமுகவின் முதல் மக்கள் பிரதிநிதியும் இரட்டை இலை சின்னத்தில் தேர்ந்தெடுத்தவருமான மாயத் தேவரிடம் உதவியாளராக இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். மாயத் தேவர் திமுகவுக்கு தாவிய பிறகு அதிமுக எம்பியாக தேர்வானார்.அதன் பிறகு மூன்று முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அதிமுகவின் பொதுச் செயலாளரான ஜெயலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். அப்போதுதான் அவர் பொருளாளராக நியமிக்கப்பட்டார்.

 அமைச்சர் பதவி

அமைச்சர் பதவி

அதன் பிறகு டிடிவி தினகரன் ஓ.பன்னீர்செல்வத்தின் வருகைக்குப் பிறகு கட்சியில் இருந்து சிறிது காலம் ஓரங்கட்டப்பட்ட அவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை அடுத்து அமைச்சராகவும் பதவியில் அமர்த்தப்பட்ட அவர் ஜெயலலிதா ஓபிஎஸ் அடுத்து சீனியர் என்ற முறையில் மூன்றாவது இடத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் அவர் தற்போது வரை அங்கேயே தொடர்ந்து வருகிறார்.

தீவிர விசுவாசம்

தீவிர விசுவாசம்

இப்படி அரசியலில் ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தாலும் அதிமுகவின் மீது மிகவும் விசுவாசம் கொண்டவர் திண்டுக்கல் சீனிவாசன். எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தீவிர பற்று கொண்டவராக விளங்கிவரும் அவர் பல சோதனையான காலகட்டங்களை சந்தித்த போதிலும் மாற்றுக் கட்சிகளுக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தனக்கு ஒருபோதும் இழந்ததில்லை என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார். குறிப்பாக அதிமுகவை தனது சொந்த வீடாகவே நினைத்து வரும் அவர் நடிகர் அர்ஜுன் போல ஒரு காரியத்தை பல ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார்.

கையில் அதிமுக கொடி

கையில் அதிமுக கொடி

பிரபல திரைப்பட நடிகரான அர்ஜுன் நாட்டுப்பற்று மிகுந்தவர் என்பது பலருக்கும் தெரியும் இன்றும் அவருக்கு பிறந்தநாள் அவரது கையில் தேசிய கொடியை பச்சை குத்தியிருப்பதை திரைப்படங்கள் கூட காட்டியிருப்பார்கள் அது உண்மை. அதே போல் தான் திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக முன்னாள் அமைச்சர்களில் அதிமுக கொடியை கையில் பச்சை குத்தி இருக்கும் ஒரே நிர்வாகி என்றால் அது திண்டுக்கல் சீனிவாசன் தான். ஏன் தற்போது பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் பதவியில் இருந்த ஒருவர் கூட அதிமுக கொடியை கையில் பச்சை குத்தி கொண்டது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Arjun and former minister Dindigul Srinivasan share an important similarity ; நடிகர் அர்ஜுனுக்கும் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் ஒரு முக்கிய ஒற்றுமை இருக்கிறது
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X