Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி? திடீரென கிளம்பிய சர்ச்சை! உண்மை என்ன தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தளமான பழனி மலைக்கோவிலுக்கு செல்லும் ரோப் கார் நிலையம் மற்றும் வின்ச் நிலையத்தில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீரான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வெளியூர்களிலிருந்தும் ,வெளிநாடுகளில் இருந்தும் வருகை தருகின்றனர்.

இவ்வாறு வருகை தரும் பக்தர்கள் படிப்பாதை, யானை பாதை, மின் இழுவை ரயில், ரோப் கார் சேவை வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவிலின் அடிவாரம் முதல், கடைகள், பாதுகாப்பு, துப்புறவு பணி என அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறை மூலமே மேற்கொள்ளப்படுகிறது.

பழனி முருகன் கோவில்

பழனி முருகன் கோவில்

பொதுவாக வெள்ளி, சனி ,ஞாயிறு தினங்களில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும் மின் இழுவை ரயில் ,ரோப்கார் நிலையத்தில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்வார்கள். மேலும் தைப்பூசம், பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், கார்த்திகை, கந்த சஷ்டி உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் பக்தர்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. நாளொன்றுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரள்வார்கள்.

திடீர் சர்ச்சை

திடீர் சர்ச்சை

பழனி மலைக் கோவிலுக்கு மூன்று வழிகளில் பயணம் செய்யலாம். பழனி மலை கோவில் அடிவாரத்தில் உள்ள வடக்கு பகுதியில் படிப்பாதை வழியாகவும் மேற்கு புறத்தில் நிலுவை ரயில் நிலையம் மூலமும் கிழக்கு புறத்தில் ரோப் கார் மூலமும் பயணம் செய்யலாம் தற்போது அங்கு வைக்கப்பட்டிருக்கும் ஒரு பிளக்ஸ் பேனர் தான் சமூக வலைதளங்களில் கடும் கொந்தளிப்பை உருவாக்கி இருக்கிறது. உண்மையிலேயே அப்படி ஒரு நடைமுறை இருக்கிறதா? மற்ற மதத்தினர் கோவிலுக்கு செல்லக் கூடாதா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி

இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி

அதாவது பக்தர்கள் பயணிக்கும் நுழைவாயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பலர் பதிவிட்டு இது உண்மையா என கேள்வி எழுப்பி வருகின்றனர். பழனி மலை கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வந்து பார்க்கின்றனர் குறிப்பாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக பழனி மலை கோவிலுக்கும் இடும்பன் மலைக்கும் வந்து செல்வது வழக்கம்.

உண்மை என்ன?

உண்மை என்ன?

இந்த நிலையில் தான் தற்போது இந்த விவகாரம் பூதகரமாக பிடித்திருக்கும் நிலையில் தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக பழனி மலைக் கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரான நடராஜனிடம் கேட்டக பலமுறை முயற்சித்தபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை. இந்நிலையில் இந்த பிளக்ஸ் பேனர் சில ஆண்டுகளாகவே அங்கு வைக்கப்பட்டு இருப்பது உண்மை தான் எனவும், தற்போது தான் இவ்விவகாரம் வெளி வந்திருப்பதாகக் கூறும் பக்தர்கள், இந்த விஷயத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

விதிகள் உள்ளது

விதிகள் உள்ளது

அதே நேரத்தில் கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற விதி இந்து சமய அறநிலையத்துறை விதிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. காலம் காலமாக உள்ள நடைமுறை இது என சொல்லப்படுகிறது. ஆனாலும் இந்த விவகாரம் தொடர்பாக கடந்தாண்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் பல கோவில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்ற நடைமுறையை மாற்ற சட்ட வல்லுநர்கள் கோவில் குருமார்களிடம் கலந்து பேசி பின்னர் முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவுகள் எடுக்கப்படும் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+