திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

2 லட்சம் இருந்தால்.. ஜாலியாக மான் வேட்டை? சர்ச்சையில் வனத்துறை! அதிகரிக்கும் துப்பாக்கி புழக்கம்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலை வனப்பகுதியில் கடமனை வேட்டையாடி அதனை உரித்து இறைச்சியை விற்பனை செய்த நபர்களை வனத்துறை அதிகாரிகள் கைது செய்து அபராதம் விதித்து விடுவித்துள்ள நிலையில் சிறுமலை வனப்பகுதியில் வேட்டை சம்பவங்களும் துப்பாக்கி புழக்கமும் அதிகரித்து வருவதாகவும் வேட்டை சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை வன சரகத்திற்கு உட்பட்ட செட்டியபட்டி பகுதியில் கடமான் இறைச்சி விற்பனை செய்வதாக திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் பிரபுவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் அடிப்படையில் திண்டுக்கல் சிறுமலை ரேஞ்சர் மதிவாணன் தலைமையிலான வனத்துறையினர் நேற்று செட்டியபட்டி பகுதியில் திடீரென சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வெள்ளோடு பகுதியைச் சேர்ந்த சபரிமுத்து என்ற சக்திவேல், பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த இருளப்பன் ஆகிய இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் கடை மான் இறைச்சியை விற்பனைக்காக கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

1050.2 ஹெக்டேர்.. எல்லாம் யானை வழித்தடம்.. வெறும் 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி.. கோவையில் மாற்றம்1050.2 ஹெக்டேர்.. எல்லாம் யானை வழித்தடம்.. வெறும் 30 நாளில் மீட்கப்பட்ட வனப்பகுதி.. கோவையில் மாற்றம்

 மான் வேட்டை

மான் வேட்டை

அதன் பின்னர் அவர்களை பிடித்து விசாரணை செய்கையில் கன்னிவாடி அருகே உள்ள ஃபுல்லாவெளி பகுதியில் உரிமம் பெற்ற துப்பாக்கியை வைத்து இந்திய வன உயிரிகள் பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ள கடமானை துப்பாக்கியால் சுட்டு மானை உரித்து கூறு கூறாக இறைச்சிகளைப் பிரித்து செட்டியபட்டி பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் அவர்களின் உத்தரவின்படி மேற்கண்ட இரண்டு நபர்களை சிறுமலை வனத்துறையினர் கைது செய்தனர்.

7 கிலோ மான் இறைச்சி

7 கிலோ மான் இறைச்சி

மேலும் அவர்களிடமிருந்து ஏழு கிலோ மான் இறைச்சி, மானின் தலை, ஒரு துப்பாக்கி மற்றும் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். இதனை அடுத்து மாவட்ட வன அலுவலர் விசாரணையில் இவர்கள் இருவரும் தலா ஒரு லட்ச ரூபாய் வீதம் அபராதம் செலுத்தி விட்டு விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட இரண்டு நபர்களுக்கு அபராதமாக வெறும் இரண்டு லட்ச ரூபாய் மட்டும் விதித்து விடுவிக்கப்பட்ட சம்பவம் வன உயிரியல் ஆர்வலர்கள் மத்தியில் மிகவும் வேதனையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 சமூக விரோதிகள்

சமூக விரோதிகள்

அதாவது பாதுகாப்புக்காக அரசு உரிமம் பெற்று வாங்கக்கூடிய துப்பாக்கிகளை இதுபோன்று சட்ட விரோதமாக மான் வேட்டையாடுதலுக்கு தவறான நோக்கத்துடன் பயன்படுத்தி வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று மான் வேட்டையில் ஈடுபட்ட இருவரும் உடனடியாக அபராதம் மட்டும் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இது போன்ற சமூக விரோதிகளுக்கும் பணபலம் படைத்தவர்களுக்கும் இது ஒரு பக்கபலமாக அமைந்திருக்கிறது என்கின்றனர் வன ஆர்வலர்கள்.

வன உயிரினங்கள்

வன உயிரினங்கள்

மேலும் தற்பொழுது அரங்கேறி வரும் வன உயிரினங்கள் வேட்டையாடுதல் எதற்காக நடைபெறுகிறது இங்கு வேட்டையாடப்படும் இறைச்சிகள் யார் யாருக்கெல்லாம் கொண்டு செல்லப்படுகிறது. இவர்கள் சாதாரணமாக இது போன்று சட்டவிரோத வேட்டையாடுதலில் ஈடுபட்டு எளிதாக வெளியே வரும் பின்னணி என்ன என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் வனவிலங்கு ஆர்வலர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர். இது மட்டும் இன்றி திண்டுக்கல் மாவட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட இன்னும் இரண்டு லட்ச ரூபாய் இருந்தால் போதும் என தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்து மான் வேட்டைக்கு திண்டுக்கல் பகுதிக்கு சமூக விரோத கும்பல்கள் வருவதற்கு இது முன் உதாரணமாக அமையும் என வேதனையோடு தெரிவிக்கின்றனர் வன உயிரிகள் ஆர்வலர்கள்.

 மான் கறி

மான் கறி

இந்த சம்பவத்தில் மான் கறி வெறும் 7 கிலோ மட்டும்தான் மீட்கப்பட்டுள்ளது என்றால் அதனுடைய மீதி இறைச்சி யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது?இதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் கிலோ 2000 ரூபாய் 3000 ரூபாய் அளவுக்கு மான் வேட்டையாடி கறிகள் விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதா வனத்துறை பிடித்தால் வெரும் இரண்டு லட்சம் தான் என்றால் சாதாரணமாக வனத்தில் இருக்கக்கூடிய மான்களின் எடை 30 கிலோவிலிருந்து 40 கிலோ வரை இருக்கும் என வன உயிரியல் வன உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

கோரிக்கை

கோரிக்கை

அப்படி என்றால் மான்கறி 2000 விதம் விற்பனை செய்து இது போன்று வன உயிரினங்களை வேட்டையாடும் கும்பல் பணத்தை லட்ச லட்சமாக சம்பாதித்து விட்டு சொற்ப பணமாக வனத்துறையிடம் இரண்டு லட்சம் மட்டும் கட்டி தப்பி விடலாம் என்ற எண்ணத்தில் இது போன்ற மான் வேட்டை திண்டுக்கலில் மறைமுகமாக நடக்க வாய்ப்பு உள்ளது என ஆதங்கத்தோடு மற்றும் சந்தேகத்தோடும் தெரிவிக்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். இந்த சம்பவத்தில் தமிழக அரசு மற்றும் மத்திய வன உயிரின புலனாய்வு அமைப்புகளும் தீர விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தொடர்ந்து இதுபோல சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு பாடமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

English summary
The forest officials have arrested and fined the persons who hunted moose and skinned it and sold the meat in Dindigul Sirumalai forest area.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X