திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காவிரி விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.. கர்நாடக கட்சிகளுக்கு கே.பாலகிருஷ்ணன் கோரிக்கை

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: கர்நாடகா தண்ணீர் திறந்து விட்டாலும் ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வாய்ப்பு இல்லை என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே,பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிாி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை ஏற்று உடனடியாக நீரை திறக்க கர்நாடக அரசு முன்வர வேண்டும். 9 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டாலும், ஜூன் 12 எதிர்பார்த்தப்படி மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீ்ர் திறக்க இயலாத சூழல் தான் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

 Do not politicize the kaveri issue. K.Balakrishnan request for Karnataka parties

தற்போதைய நிலவரப்படி 47 அடி தண்ணீரே மேட்டூர் அணையில் உள்ளது. ஒருவேளை கர்நாடகம் 9 டிம்சி தண்ணீரை திறந்தால் கூட மேற்கொண்டு 4 முதல் 5 அடி வரை மட்டுமே மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும்.

அது குறுவை சாகுபடிக்கு நீர் திறக்க போதுமான அளவாக இருக்காது என குறிப்பிட்டார். மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரு 60 அடி வரை உயர்ந்தால் தான், குறுவை சாகுபடிக்காக அணையிலிருந்து திறக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்குப் பருவமழை துவங்கும் என சொல்லப்படுகிறது. மழை பெய்யும் பட்சத்தில் இதனுடன் 9 டிஎம்சி தண்ணீரும் வந்தால், ஜூன் இறுதியிலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை திறக்க வாய்ப்பு உருவாகும் என்றார் பாலகிருஷ்ணன்.

மக்களவை தேர்தலில் சறுக்கல்.. உறுப்பினர்கள் கட்சி தாவல்.. அதிரடியாக அமைச்சரவையை மாற்றிய மம்தாமக்களவை தேர்தலில் சறுக்கல்.. உறுப்பினர்கள் கட்சி தாவல்.. அதிரடியாக அமைச்சரவையை மாற்றிய மம்தா

மேலும் அரசியல் சட்டத்திற்கு மதிப்பளித்து, கர்நாடக கட்சிகள் காவிரி விவகாரத்தில் அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

இதனிடையே காவிரி ஆணையத்தில் தமிழகம் சரியாக வாதிட்டதா என்பது குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட வேண்டும் என்று காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் - மே வரை கர்நாடக வழங்க வேண்டிய தண்ணீரை தமிழக அதிகாரிகள் கேட்காது ஏன் என வினவியுள்ளது. இதற்கான காரணத்தை தமிழக அரசு வெளியிடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

English summary
Even though Karnataka water is opened, the Mettur dam will not be opened on June 12, CPI state secretary K. Balakrishnan said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X