ஒன்றியம், நாடாளுமன்றம், மாநகராட்சி எல்லாமே கைவிட்டு போச்சு..வலுக்கும் எதிர்ப்பு..சிக்கலில் சீனிவாசன்
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், ஊரக உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல் என அனைத்து தேர்தல்களிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அதிமுக படுதோல்வியை சந்தித்து உள்ளதால் சொந்த கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் உருவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் அதிமுகவின் முக்கிய முகமாக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன். திண்டுக்கல் மாவட்ட செயலாளர், கழக அமைப்புச் செயலாளர், கழக வழிகாட்டுதல் குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட அவர் திண்டுக்கல் கழக அவைத் தலைவராக பெயருக்கு பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னதாக அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கழக பொருளாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்து வந்தார்.

திண்டுக்கல் சீனிவாசன்
பின்னர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் பதவி பறிக்கப்பட்ட அவர் சுமார் பத்தாண்டு கால அரசியல் வனவாசத்தை அனுபவித்து வந்தார். பின்னர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் அவருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற அவர், ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் தோல்வியடைந்ததால் வனத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதன் பிறகு திண்டுக்கல் மாவட்ட அதிமுகவில் சீனிவாசனின் செல்வாக்கு உயர்ந்தது. கடந்த காலங்களில் தனக்கு எதிராக செயல்பட்டவர்களை ஓரம்கட்டிய அவர், பின்னர் எதிர்ப்பாளர்களை தன்வசப்படுத்தி முக்கிய ஆளுமையாக உயர்ந்தார்.

தொடரும் சர்ச்சை
ஆனால் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் மீண்டும் அவரது செல்வாக்கு சரிந்தது. ஜெயலலிதா கொள்ளையடித்த பணம் , பிரதமர் மன்மோகன் சிங், ஜெயலலிதாவை நேரில் சந்தித்தோம் இனிப்பு வழங்கினார் என்ற பேச்சுகள் பெரும் சர்ச்சையையும் நகைப்பையும் ஏற்படுத்தின. முக்கியமாக பழங்குடியின மாணவனை செருப்பை கழற்றக் கூறியது இந்தியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடும் எதிர்ப்புகளும் எழுந்தது. இவ்வாறு சர்ச்சை புயலில் சிக்கிய அவர் அரசியலில் தேர்தல்களிலும் பெரிதாக சோபிக்கவில்லை என்றே கூறலாம்.

உட்கட்சி பூசல்
முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வனநாதனை ஓரம் கட்டினாலும் அவரை தேர்தலில் சமாளிக்க முடியாமல் போனது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உட்கட்சி பூசல் காரணமாக திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிக்கு முற்றிலும் புதியவரான திமுக வேட்பாளர் வேலுச்சாமி சுமார் 4 லட்சம் வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அதிமுக கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. அதற்கு உட்கட்சி பூசல் காரணமாக சொல்லப்பட்டது. ஆனால் அந்த தேர்தலோடு நடத்தப்பட்ட சட்டமன்ற இடைத் தேர்தலில் நிலக்கோட்டை தொகுதியில் அதிமுக வேட்பாளர் தேன்மொழி வெற்றி பெற்று அதிமுக ஆட்சி நிலைக்க காரணமாக இருந்தார்.

அடுத்தடுத்து தோல்வி
நிலக்கோட்டை தொகுதி பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டு வெற்றி வாகை சூடிய நிலையில் , அது திண்டுக்கல் சீனிவாசனுக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இதையடுத்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக பெரிதாக சோபிக்கவில்லை. பல ஒன்றியங்களை அதிமுக இழந்த நிலையில், திண்டுக்கல் சீனிவாசனின் சொந்த தொகுதியில் உள்ள திண்டுக்கல் ஒன்றியத்தை ஆளும் கட்சியாக இருந்தபோதிலும் திமுகவிடம் இழந்தது. இதனால் அப்போதே சீனிவாசன் மீது கட்சியினர் கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியானது.

கட்சிக்குள் நெருக்கடி
அதற்கு பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ள சீனிவாசனின் கட்டுப்பாட்டில் திண்டுக்கல்லில் அவரும், வேடசந்தூரில் பரமசிவமும், ஒட்டன்சத்திரத்தில் நடராஜனும் போட்டியிட்டனர். ஆனால் திண்டுக்கல் தவிர இரண்டு தொகுதிகளிலும் அதிமுக தோற்றது. தற்போது நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திண்டுக்கல் மாநகராட்சி, ஒட்டன்சத்திரம் நகராட்சி,வடமதுரை உள்ளிட்ட பேரூராட்சிகளை அதிமுக இழந்துள்ளது. இதனால் கட்சிக்குள், அதிமுக தலைமையிலும் அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தலைமையிடம் புகார்
குறிப்பாக திண்டுக்கல் மாநகராட்சி தேர்தலில் தனது மகன் ராஜ்மோகன் போட்டியிட்ட நிலையில் அங்கு வாக்காளர்கள் நன்கு கவனிக்கப்பட்டனர். ராஜ்மோகன் உள்ளிட்ட சீனிவாசனின் ஆதரவாளர்கள் வெற்றி பெற்ற நிலையில் மற்ற 43 வார்டுகளில் அதிமுகவினர் தோல்வியடைந்தனர். இதற்கு முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகள் தான் காரணம் எனக் கூறியுள்ள "அதிமுக மூத்த நிர்வாகிகள்" அவருக்கு எதிராக கட்சித் தலைமைக்கு புகார் அனுப்பியுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications