Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

’திருமண நாளிதழ்’ ரூம் போட்டு யோசிப்பாங்களோ.. பட்டைய கிளப்பிய பழனியன்ஸ்! வசனம் ஒவ்வொன்னும் தரம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : இதெல்லாம் உங்களுக்கே ஓவரா இல்லையா என்பது போல திண்டுக்கல்லில் நண்பரின் திருமணத்திற்காக அப்பகுதி இளைஞர்கள் செய்தித்தாள் போல வைத்துள்ள பிளக்ஸ் பேனர் அப்பகுதி மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளதோடு, நாளிதழ் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டிங்.

அந்தக் காலத்தில் எல்லாம் திருமணம் என்றால் மாவிலை தோரணம் கட்டி உறவினர்கள் புடை சூழ வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெறும்.

தற்போது வீடியோ கால், மெட்டாவெர்ஸ் தொழில்நுட்பம் என திருமணங்கள் அடுத்த கட்ட நிலைக்கு சென்று விட்டது இருந்த போதும் நண்பர்கள் போஸ்டர் பிளக்ஸ் வைக்கும் கலாச்சாரம் மட்டும் அப்படியே இருக்கிறது.

பேனர் கலாச்சாரம்

பேனர் கலாச்சாரம்


முதலில் வெள்ளை துணியில் திருமண அழைப்பு என எழுதி வைத்த பேனர் கலாச்சாரம் தற்போது நவீன யுக டிஜிட்டல் புரட்சியில் அடுத்தடுத்து பல மாற்றங்களை சந்தித்து வருகிறது. மீம் கிரியேட்டர்ஸ் போல ரூம் போட்டு யோசிப்பாங்களோ என்ற ரீதியில் பல ப்ளக்ஸ் பேனர்கள் சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது. அப்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோதைமங்கலத்தில் நண்பரின் திருமணத்திற்காக வைத்த பிளக்ஸ் பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி இருக்கிறது.

 நாளிதழ் போலவே பிளக்ஸ்

நாளிதழ் போலவே பிளக்ஸ்

கோதை மங்கலத்தைச் சேர்ந்த கௌதம் என்பவருக்கும் சென்னையைச் சேர்ந்த வினிதா என்பவருக்கும் இன்று பழனியில் திருமணம் நடைபெற்றது. இருவரும் நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்களால் இந்த திருமணம் செய்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் அவர்களது திருமணத்திற்காக நண்பர்கள் பிரபல நாளிதழ் போலவே பிளக்ஸ் பேனர் வைத்துள்ளனர்.

திருமண நாளிதழ்

திருமண நாளிதழ்

'திருமண நாளிதழ் - வெல்க காதல்' என வைக்கப்பட்டுள்ள அந்த பிளக்ஸ் பேனரில் வினிதாவின் மனதை திருடிய குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் விளையாட்டுச் செய்திகள் என கல்யாண பந்தியில் கலவரம் கரிக்கஞ்சிக்கு கைகலப்பு செய்த சதீஷ், தீபராஜ், முருகன் ஆகிய இளைஞர்கள் கைது செய்து பின்னர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் எனவும், பலகாரத்தில் முடிந்த பரிதாபங்கள் என்ற பெயரில் பால் விற்க சென்ற இடத்தில் கவிதாஸ், அருண், கார்த்தி என்பவர்கள் பலகாரம் திருடி பளார் என்று அரை வாங்கிய இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது.

ஊரை ஏமாற்றுதல்

ஊரை ஏமாற்றுதல்

பின்னர் 'கல்யாண மாலை எங்களுக்குத் தேவை' என பாண்டியன் காளிதாஸ் ராஜேஷ் ஆகியோருக்கு பெண் கேட்டும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அவர்களது தொழில் என ஊமை சேட்டை, ஊரை ஏமாற்றுதல், வெட்டிப் பையன் என கலக்கி எடுத்துள்ளனர் நண்பர்கள். குறிப்பு :- சாதி மதம் தடையில்லை முன்பதிவு அவசியம், படிச்சது போதும் பந்திக்கு போங்க என வைக்கப்பட்டுள்ள இந்த பிளக்ஸ் பேனர் தான் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும் திருமணத்திற்கு வந்த பலரும் அந்த பிளக்ஸ் பேனரை ரசித்துப் பார்த்ததோடு இந்த மாதிரியெல்லாம் யார் யோசித்தது என கல்யாணம் மண்டபத்தில் அவர்களை வளை போட்டு தேடி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+